பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 103 வினை என்றால் என்ன? வினை யென்பது வேற்றுமை ஏலாது: காலங்களை அறிவிக்கும். வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும். இவ்வாறு தொல்காப்பியர் எளிமையும் இனிமையும் பொருந்த வினையை விளக்கினார். ஆங்கில மொழி நூலார் ஒருவர் வினையை விளக்குங்கால் (Words inflected for person, number, tense, mood and voice are called verbs) இடம், எண், காலம், வினை அமைப்புக் களை அறிவிக்கும் சொற்களே வினைகள் என்றார். வினை அமைப்புக்களை (moods) அறிவித்தல் வினைக்குரிய இயல்பாகும். இடமும் எண்களும் பெயர்களாலும் அறிவிக்கப்படும். காலம் அறிவித்தல் ஒன்றே தமிழ் வினைக்குச் சிறப்பாகும். ஆகவே காலமொடு தோன்றும் என்றார். வேற்றுமை ஏற்றல் பெயர்க் குரிய இலக்கணம். வினைச்சொற்களும் வேற்றுமை உருபை ஏற்றால் பெயராய்விடும். வந்தான் என்ற வினை வந்தானை என்று இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்றவுடன் வந்த ஒருவனைக் குறித்துப் பெயர்த்தன்மை அடைந்து விடுகிறது. இம்முறை யானது தமிழுக்கே உரிய சிறப்பாகும். வந்தானைக் கண்டேன் என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் இரு சொற்றொடர் ஆகும் (Isaw the man who came). காலமொடு' என்பதனால் காலத்துடன் சேர்ந்தே வரும். காலமில்லையேல் வினையில்லை என்பதற்காகவே காலமொடு தோன்றும் என்றார். இதனால் வினைக்குக் காலம் முதன்மை என்று கூறிவிட முடியாது என்று சிலர் கருதுவது தவறுடைத்தாகும். 'நினையுங்காலை' என்று கூறியதனால் அக்கருத்துப் பெறப்படுகின்றது என்றும் கூறுவர். 'வினை' .