பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 125 மென வரையறை செய்தனர். இவ்வரையறை இலக்கணம், புலவர்க்கு அளிக்கப்பட்ட சிறைக் கூடம் அன்று ; உரிமையோடு வாழும் பேரில்ல மாகும். இலக்கண நெறியில் நின்று. விரும்பும் உரிமையோடு மரபு நெறி வழுவாது புதியன படைக்கப் புலவர்க்கு வழிகாட்டினர். ஆகவே பொருட் படலம் இலக்கணப் பகுதியின் இணைபிரி யாத உறுப்பாக இலங்கியது. தொல்காப்பியப் பொருட்படலத்தால் தமிழிலக்கியம் படைக்கப்பட வேண்டிய முறைமை பற்றியும், தமிழிலக்கிய நிலை பற்றியும், இலக்கியம் தோன்றுவதற்கு அடிநில மாகும் மக்கள் வாழ்வு பற்றியும் தெளிவுற அறிதல் கூடும். இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல். அதன் பொருள் 'குறிக்கோளை இயம்புதல்' என்பதாகும். வாழ்வின் குறிக்கோளை இலக்கியத்தின் குறிக்கோளை இயம்புதலே பொருட் படலத்தின் நோக்கமாகும். வாழ்வின் குறிக்கோள் என்ன? இன்பமாக வாழ்தல். வாழ்வே இன்பத்திற்குரியது. வாழ்வில் ஓரொருகால் துன்ப நிகழ்ச்சிகள் தோன்றினும் அவையும் இன்பத்திற்கு அடிப்படையாகும்; ஆதலின் இன்பமென்றே கருதத் தக்கன. எல்லாம் இன்ப மயம். இன்ப வாழ்வுக்கே இன்ப வாழ்வால் மக்கள் தோன்றியுள்ளனர். உலகில் தோன்றிய பிற நாட்டுப் பெரியார்கள், "உலகம் துன்ப மயம்: துன்ப வாழ்விலிருந்து விடுதலை பெறுவதே வாழ்வின் குறிக்கோள் " என்றனர். தமிழ்ப் பெரியார்கள் அவ்வாறு கருதாது, "வாழ்வு இன்பத்திற்குரியது: இன்பமாக வாழ்தலே வாழ்வின் குறிக்கோள் " என்று