பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 127 வரலாற்று நூலாசிரியர்களில் பெரும்பான்மை யினர் தொல்காப்பியத்தைக் கற்றறியும் பேறு பெற்றிலர். ஆகவே தமிழர்களைப் பற்றித் தவறான செய்திகளை எழுதிவிட்டனர். தமிழக வரலாறு எழுதுவோர் தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும். தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்றும், ஆரியர்களால் நாகரிகர் ஆக்கப்பட்டவர் என்றும், திராவிடம் என்ற சொல்லிலிருந்தே 'தமிழ்' என்ற சொல் தோன்றியது என்றும் உண்மை நிலைக்கு மாறாகக் கூறியவர்களும் உள. ஆயர்கள் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்த தமிழகப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தொல்காப்பியத் தினால் நன்கு அறியலாகும். அப்பண்பாடும் நாகரிக மும் இக்காலத்திலும் போற்றிக்கொள்ளக் கூடியனவாய் உள்ளன. அங்ஙனமிருந்தும் உலகப் பண்பாடு, உலக நாகரிகம், உலக வரலாறு என்று கூறப்படும் நூல்களில் தமிழகத்தைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் காண இயலாது. கிரேக்க நாட்டுப் பெரியவர்களைப் பற்றி விரித்துக் கூறி, கிரேக்க நாடே உலகப் பண்பாட்டின் பிறப்பிடம் என்று ஓயாது முழங்குகின்றனர். ஆனால் தொல்காப்பியத்தின் வழியாகத் தமிழகப் பண்பாட்டை அறிந்து அஃதே உலக நாகரிக ஊற்று என அறிகின்றாரிலர். மக்கள் வாழ்க்கை அடிப்படையில் இலக்கியம் இயற்றப்படல் வேண்டும் என்று வரையறுக்கும் தொல்காப்பியம், மக்கள் வாழ்க்கையை எவ்வாறு கூறுதல் வேண்டும் என்பதை அகத்திணை இயல்,