பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் " " முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை' 147 (முந்நீர் வழக்கம் கடலில் செல்லும் செயல், மகடுவோடு = பெண்ணொடு, இல்லை = கிடையாது.) = = எல்லா உரிமைகளும் பெற்றிருந்த தமிழக மகளுக்கு இவ்வுரிமை ஏன் மறுக்கப்பட்டது? நாட்டு நலன் கருதியே நாட்டுப் பற்றின் காரணமாக மறுக்கப்பட்டுள்ளது. மனைவி வீட்டிலிருக்கக் கணவன் கடல் கடந்து வெளி நாடு சென்றால். மனைவியை நாடி மீண்டும் நாட்டுக்குத் திரும்பி வருவான். மனைவியும் உடன் இருப்பாளேல், நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உண் டாதல் இயலாததாகி விடலாமன்றோ? எந்நாட்டில் இருந்தாலும் அந்நாட்டைத் தமதாக்கி வாழ எண்ணி விடச் செய்யலாம். ஆகவே இத்தடையை ஏற்படுத்தி உள்ளனர். பண்டைத் தமிழகத்தில் மக்கள் கடல் கடந்து சென்றமையும், கடலைக் கடப்பதற்குரிய நாவாய் முதலியன பெற்றிருந்தமையும், இந் நூற்பாவால் அறியலாம். மகளிர்க்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன் னொன்றும் உண்டு. ஆடவன் ஒருவன் ஒருத்தியைக் காதலித்தால் அவளை இயல்பான முறையில் அடைய முடியவில்லையேல் மடலேறியாவது அவளை அடைய லாம். மடலேறி அடைதலாவது:- மடல் என்பது பனங்கருக்கு. பனங்கருக்கால் குதிரை ஒன்று செய்து, அதன் மீது ஏறி, அதனை இழுக்கச் செய்தல். அதனை இழுத்துச் செல்லுங்கால் அவன் கையில்தான் விரும்பிய பெண்ணின் ஓவியம் வரையப்பட்ட துணி கட்டிய கொடி ஒன்றை வைத்திருப்பான். பனங் கருக்கு அவன் உடல் உறுப்புக்களை அறுக்கும்.