பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தொல்காப்பிய ஆராய்ச்சி நிரம்பிய புலவரால் பாடப்பட்டு வழங்கி வருவது ஆதலின் அப்பெயர் பெற்றது போலும். “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலன்நெறி வழக்கம் கலியே பரிபாட்டுஆயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர் 33 என்மனார் புலவர்" என்பதனால் இப் புலன் நெறி வழக்கமாம் இலக்கியப் படைப்பு நெறி இவர்க்கு முன்புள்ள புலவர்களால் கொள்ளப்பட்ட ஒன்றாகும் எனத் தெரியலாம். ஆதலின், கிரேக்க நாட்டு அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் இலக்கிய நெறி முறைகள் வகுக்கப்பட்டுப் பயிலப்பட்டுப் பாடப் பட்டு வந்தன என அறியலாம். பயன்படுவது கருத்தை விளக்குவதற்குப் 'உவமம்'. அறிந்ததைக்கொண்டு அறியாத்தை விளக்குவதாகும் இவ்வுவமம் யாவரும் எளிதில் உணர்தற்குரியதாகும். ஆனால் அகப்பொருளில் பயன்படுத்தப்படும் உள்ளுறை உவமம் நுண்ணறி வும்,நூற்பயிற்சியும் உடையோரால் மட்டும் உணரப் படும் மாட்சியது. உவமம் அடிப்படையில் தான் உள்ளுறை யுவமம் தோன்றும். வெளிப்படையாகத் தோன்றாது பொதிந்து மிளிரும். உள்ளுறை என்ற பெயரே அதன் இயல்பை விளக்குகின்றது. 64 'வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற்கொண்ட ஞாங்கர் மலர்சூழ்தந்து ஊர்புகுந்த வரிவண்டு ஓங்குயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம் ஆங்கவை விருந்து ஆற்றப் பகல் அல்கிக் கங்குலான் வீங்கிறை வடுக்கொள வீழ்நர்ப் புணர்ந்தவர் தேங்கமிழ் கதுப்பினுள் அரும்பவிழ் நறுமுல்லை பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதாம் மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர !