பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 155 ஆசுரம்: கொல்லேறு தழுவியும், திரிபன்றி எய்தும், வில்லேற்றும் தன் ஆண்மையைக் காட்டி ஒருத்தியை மணப்பது. இராக்கதம்: தலைமகள் விருப்பத்தையும் அவள் பெற்றோர் விருப்பத்தையும் பெறாது வலிதிற் கொண்டு சென்று மணப்பது. இம்முறை இக் காலத்தில் சட்டத்திற்கு மாறுபட்டதாகும். பெருந் தண்டனைக்குரியதாகும். பைசாசம்: வயது முதிர்ந்தோர், கள்ளுண்டு களித் துள்ளோர்,உறக்க நிலையில் உள்ளோர் இவர்களைக் கூடுதலும் இழிந்தோளை மணப்பதும் ஆம்.இழிந் தோளை மணப்பது ஒழிந்த ஏனையவற்றை எவ்வாறு திருமணம் என்று அழைத்தனரோ? இழிந்தோளை மணத்தலை ஏன் 'பைசாசம்' என்றனரோ? காந்தருவம்: தேவருலகத்திலுள்ள கந்தருவ குமாரரும் அவர் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டுமணங் கொள்வதுபோலத் தலைவனும் தலைவி யும் சந்தித்துக் கூடுவது. இக் கந்தருவ முறையே தமிழரின் காதல்முறைக்கு ஒத்துளது. ஆயினும் கந்தருவம் கற்பின்றி அமை யவும் பெறுமாம். ஆனால் தமிழ்க்களவு (காதல்) கற்பின்றி அமையாது என்பர் நச்சினார்க்கினியர். இருவரும் தாமே சந்தித்து மணந்து கொள்ளுதல் என்ற அளவில் தமிழ்க் களவு முறையும் வடமொழிக் காந்தருவ முறையும் ஒத்திருப்பதால் வடமொழிக் காந்தருவ முறையைப் போன்றது தமிழ்க் களவுக் கூட்டம் என்று ஆசிரியர் கூறியிருத்தல் வேண்டும். வடநூலாரது எண்வகை மணமுறை காலத்தால் பிற்பட்டது என்பர் ஒருசாரார். மகாபாரதத்தில் இவ்வெட்டு வகை மணமுறையும் கூறப்பட்டுள்ளது.