பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 159 கட்டுப்பாட்டுடன் உள்ளத்தைக் கண்டவாறு செல்ல விடாது ஒருமித்த கருத்துடன் உயர்ந்தோராய் வளர்ந்து வருங்கால் பால் உணர்ச்சி தோன்றி மணக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். அவ்வாறு மண வாழ்க்கை வேண்டுமென்று எண்ணும் காலத்தில் எல்லாவகையாலும் ஒத்த நிலைமையில் உள்ள மைந்தனும் மகளிரும் தம்முள் காதல் உணர்வு தோன்றுவதை அறிவர். பெண்ணி னும் ஆண் சிலவகைகளில் சிறப்புடையோனாக இருந்தாலும் குற்றமின்று. இவ்வாறு பொருள் கொள்வது எக்காலத்தும் யாவர்க்கும் பொருந்துமன்றோ. எங்ஙனமாயினும் காதல் திருமணமே பண்டைத் தமிழகத்தில் போற்றப்பட்டது என்பதில் எட்டுணையும் ஐயமின்று. 1 காதல் திருமணமே நாகரிகத்தின் உச்சநிலை யாகும். ஆதலின் தொல்காப்பியர் காலத் தமிழகம் நாகரிகத்தால் சிறந்திருந்தது என்று தெளியலாம். காதல் திருமணமே பெண் உரிமையை ஏன் ஆண் உரிமையையும் நிலைநாட்டக் கூடியது. ஆடை அணிகலன் முதலியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமையளிக்கும் மன்பதை தம் வாழ்க்கைத்துணை யைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமையளிக்க ஒருப்படாதது கொடுமையினும் கொடுமையன்றோ? காதல் மணமென்றால் கண்டவன் கண்டவளை மணப்பதாகும் என்பது அன்று. "ஒத்த கிழவனும் கிழத்தியும்" என்று கூறியது எற்றுக்கு? அவர்களி டையே ஒத்த இயல்புகள் வேண்டும் என்பதற் கன்றோ? எவ்வெவ்வகைகளில் ஒத்திருக்கவேண்டு மென்பதை ஆசிரியரே மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார்.