பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 163 நிலையை அறிய முற்படுதலே தலைவன் இயல்புக்குச் சிறப்புடைத்தாகும். அங்ஙனமின்றிக் கண்டவுடன் காதலிக்கத் தொடங்கிவிட்டால் தலைவனின் ஒழுக்கத் தாழ்வைத்தான் வெளிப்படுத்தும். சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப இழிந்துழி இழிபே சுட்ட லான.' 39 தலைவிக்கும் இது பொருந்தும். தலைவியும் தலைவனைப் பற்றி ஐயங்கொண்டு அவன் உண்மை நிலையை அறிந்து காதலித்தலே முறைமை. உலகியலில் இவ்வாறு, நடைபெறுதலே இயல்பாய் இருத்தல் வேண்டும். ஆனால் இலக்கியத்தில் வரும் தலைவன் தலைவியர்க்குச் சில மரபுகளைக் கொண்டுள்ளனர் புலவர்கள். தலைவன் சிறந்த தலைவியைக் கண்ட வுடன் அவளைப்பற்றி அவள் யாரோ என ஐயம் கொள்ளுவான். அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு, என அமைப்பது இலக்கியமரபு. 24 இவ்வாறு தலைவியும் தலைவனைக் கண்டு முருகனோ இயக்கனோ மகனோ என ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் " தலைவிக்கு ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக் குறிப்பு (காதல் குறிப்பு) நிகழாதாம் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். ஆனால் சேக்கிழார் தாம் இயற்றிய பெரிய புராணத்தில் பரவையார், வன்தொண்டரைக் கண்டு, 65 முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகொளியால் தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ மின்னேர் செஞ்சடை யண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ என்னே என் மனந்திரித்த இவன் யாரோ ? என நினைந்தார்"