பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 என்பவர் கற்பனையால் தோற்றுவிக்கப்பட்டவர்" என்று ஆராய்ச்சியாளரில் சிலர் கூறுகின்றனர். அவருடைய வாழ்க்கைச் செய்திகள் அவ்வாறு கூறச்செய்கின்றன. இல்லாத அகத்தியருக்குத் தொல் காப்பியரைப் பொல்லாத மாணவராக்கிவிட்டனர். தொல்காப்பியரோ தமது நூலில் தம் ஆசிரியராம் அகத்தியரைப்பற்றியோ தந்தையாம் சமதக்கினி பற்றியோ ஒன்றுமே கூறினாரிலர். ஆகவே அகத்தியர், சமதக்கினி முதலியோரின் தொடர்புகொண்டு தொல் காப்பியரின் காலத்தை நிறுவுதல் வரலாற்று ஆராய்ச்சிக்குப் பொருந்துவதின்று. இனித் தொல்காப்பியர் நூலுக்குப் பனம்பாரனார் கூறியுள்ள சிறப்புப்பாயிரம் கொண்டு தொல்காப்பியர் காலத்தை அறுதியிட்டுரைத்துள்ளதை ஆராய்வோம். பனம்பாரனார் கூறியுள்ள பாயிரமாவது:- வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து அறம்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில்தவத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தேசற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே.