பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 172 பிறரறியத் தன் குணம் செயல் மாறுபாட்டினால் வெளிப்படச் செய்தலினாலும் இருவர்க்கும் கூட்ட முண்மை வெளிப்படுதல் இயல்பே. தலைவி என்றும் வீட்டிலே இருப்பவள் ஆதலினாலும் எதனையும் விரைந்து வெளிப்படுத்தா நிலைமை பெண்களுக்குரிய இயல்பாய் இருத்தலினாலும் தலைவனால் வெளிப்படும். என்று ஆசிரியர் கூறினார். 46 • அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின் அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும். அம்பலும் அலரும் மிகுதியானவுடன் தலைவி இற் செறிக்கப்படுவாள்; காவல் மிகுதியாகும். திருமணப் பேச்சு ஏற்படும்; தலைவன் வீட்டாரே பெண்கேட்டு வருவர். பெண்ணின் பெற்றோர் இயைந்து அவனுக்கே இன்னான் என்று தெரியாத நிலையில் கொடுக்க விரும்பினும் விரும்பலாம். விரும்பாது வேறொருவனுக்குக் கொடுக்க விழைந்தாலும் விழையலாம். தலைவியின் உடல் வாட்டத்தைக் கண்டு அதன் உண்மைக் காரணம் இன்னது என்று அறியாது கட்டினாலும், கழங்காலும் வெறியாட்டத்தாலும் அறிய முயல்வர். இவற்றால் உண்மை அறிய முடியாது; நோய் தணியாது. தலைவிக்குக் காதல்நோய் மிக்குக் கனவிலும் அதன் விளைவால் அரற்றலும் ஏற்படும். இவ்வாறு பல வகையால் தலைவியின் காதல் வெளிப்பட்டு விடும். அவள் காதலித்த தலைவனுக்கே மணம் செய்து கொடுத்தல் இயலாது போயின் அவள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி விடுவாள். இவ்வாறு காதலனுடன் காதலி பெற்றோர் அறியாமல் புறப்பட்டுச் செல்வதை 'உடன்போக்கு என்பர்,