பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தொல்காப்பிய ஆராய்ச்சி சிலர்தாம். ஆகவே கற்பென்பது ஏட்டளவில் நின்று விடுகின்றது. பலவிதச் சூழ்நிலைகளினால் இக்கற்பு நிலை மேற்கொள்ளப்படாது போய்விடுகின்றது. திரு மணத்திற்கு வேண்டப்படுவது காதல் என்றால், காதலுக்கு வேண்டப்படுவது கற்பேயாகும். காத லால் கூடிய இருவரும் என்றும் காதலில் திளைத்து வாழக் கற்பு மிகமிக இன்றியமையாதது. ஆதலின் இக்கற்பைப் போற்றாதார் எவரும் இலர். தனிமையிற் கூடிப் பிறர் அறியாமல் காதலித்து ஒழுகியவர்கள் அவ்வாறே தொடர்ந்து ஒழுகிய கால மும் இருந்தது. ஆனால் அத்தொடர்ச்சி நீடியாது இடையறவு பட்டுப் போனதுண்டு. ஒருத்தியைக் காதலித்து ஒழுகி வந்தவன் இன்னொரு அழகியைக் கண்டால் முன்னால் காதலித்தவளைக் கைவிட்டுப் புதியவளைப் போற்றிக்கொள்ளும் இயல்பும் ஏற்படும். இவர்கள் காதல் பிறரறியாமல் வளர்ந்ததால் கைவிடப் பட்டவள் நிலை இரங்கத்தக்கதாகிவிடும். ஆதலின் மன்பதை ஒழுகலாற்றில் காதலித்த இருவரும் கடி மணம் புரிந்து கொள்ளுதல் இன்றியமையாததாய் விட்டது. பல்லோரறியத் திருமணம் செய்து வாழ் தலே காதலை உறுதிப்படுத்தும் காவலாகிவிட்டது. திருமணத்திற்கு 'வரைதல்' என்றும் பெயருண்டு. 'வரைதல்' என்றால் வரையறுத்துக் கொள்ளுதல், என்று பொருள்படும். பலர்க்கும் உரியளாம் தகுதி வாய்ந்த ஒருத்தியைத் 'தனக்கே உரிமையாக்கிப் பிறர் உரிமையினின்றும் நீக்கிக் கொள்ளுதல்தான் திருமணம். திருமணமின்றிப் பலருடனும் கூடி வாழும் விலை மகளிரை வரைவில்மகளிர் என்று அழைத்தலும் இதனாலேயேயாகும். 'திருமணம் என்பது பொருள் பொதிந்த சொல்லாகும். தனித்து வாழ்ந்த ஆடவனும் தனித்து வாழ்ந்த பெண்ணும்