பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 175 தனித்து வாழும் வரையில் பிறரைப் பற்றிய எண்ணம் கொண்டிரார். இருவரும் காதலால் கூடிய பின்னர் அவன் அவளுக்காகவும் அவள் அவனுக் காகவும் பின்னர் இருவரும் தாம் பெறும் மக்களுக் காகவும் வாழத் தொடங்குகின்றனர். மனைவி. மக்கள், குடும்பம் என்று கருதியவன் அக்குடும்பங் களால் நிறைந்த உலகத்தையும் எண்ணவேண்டிய வனாகி விடுகிறான். ஆகவே பிறர்க்கென வாழும் நிலை வந்துவிடுகின்றது. பிறர்க்கென வாழ்ந்தால் புகழ் தானே வந்தடைகின்றது. புகழ் என்பது வாழ்வின் மணம் ஆகும். மணமுள்ள வாழ்வை அளிக்கும் ஒன்றைத் திருமணம் என்பது எவ்வளவு பொருத்த மானது. மணம்' என்பதற்குக் கூட்டம் என்ற பொருள் இருந்தாலும்,வாசனை' என்ற பொருளே யாவரும் அறிந்த தொன்றாகும். ஆதலின் திருமண வாழ்வு வாசனை வீசும் புகழ் பரப்பும் வாழ்வு ஆகும். திரு என்றால் கண்டவரால் விரும் பப்படும் தன்மை. மண வாழ்வு யாவராலும் போற் றப்படும் ஒன்றாகத் திகழ்தல்வேண்டும்.திருமணம் என்று பெயரிட்ட நம் முன்னோரின் அறிவு நுட்பத் தின் ஆற்றல்சால் பெருமைதான் என்னே! மணமற்ற வாழ்வு பிண வாழ்வுதான் என்று கருதிய நாடுகளும் உண்டு. இம் மணவாழ்வினையே தொல்காப்பியர் கற்பு என்றனர். . நல் மணவாழ்வால்தான் கற்பு உறுதிப்படுகின்றது. திருமணம் செய்து கொள்ளாதவரிடையே கற்பு நிலைத்திருப்பது அரிதாகிவிடும் என்று அறிந்தனர் நம் முன்னோர். ஆதலின் திருமணமே கற்பெனப் பட்டது ஆகுபெயராம்.