பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தொல்காப்பிய ஆராய்ச்சி இன்றும் இருக்கின்றனர். ஆடவர்க்குப் பெண்ணின் கூட்டுறவு வாரத்திற்கு இருமுறையேனும் இருத்தல் வேண்டும் என்பர். மனைவிக்குக் கரு உண்டாய் விட்டால் இரண்டு ஆண்டுகளேனும் அவன் அவ ளிடம் நெருங்காதிருத்தல் வேண்டும் என்பர். அக் காலங்களில் அவன் என்ன செய்வான்? அதனாலேயே இரண்டாம் மனைவியைக் கொண்டான். அவளுக்கும் வயிறு வாய்ப்பின் வேறொரு பெண்ணை நாட வேண்டி யது தானே. ஆகவே காமக்கிழத்தி யென்றும். இற் பரத்தை யென்றும் சேரிப்பரத்தை யென்றும் கொண்டு வாழ்ந்தான். அக்காலத்தில் நாடுகட் கிடையே அடிக்கடி போர் நிகழும். வயது வந்த ஆடவர் அனைவரும் போருக்குச் செல்லுவதற்குரியர். ஆகவே ஆடவர் தொகை நாளுக்குநாள் குறைந்து வரும். ஓர் ஆடவன் பல மகளிரை மணக்க வேண்டி யிருந்துள்ளது. மனைவியாக வாழமுடியாது போனா லும் பரத்தையராகவேனும் வாழ முற்பட்டிருக்க வேண்டும். வினை முயற்சிக்குரிய வாய்ப்புக்களும், பொழுது போக்குதற்குரிய சூழ்நிலைகளும் மிகுதி யாகப் பெருகியிராத காலம். செல்வப் பெருக்குடைய ஆடவர் அழகிய இளம்பெண்களுடன் பொழுது போக்குதலைத் தேடிக்கொண்டு விட்டனர். பரத்தை மையின் தோற்றம் இதுதான். இப்பரத்தையர்கள் முதலில் ஒருவனுக்கே உரிமை பூண்ட காதற் கிழத்தி யராகத்தான் இருந்தனர். விலை மகளிராக இருந் திலர். ஆனால் காலப்போக்கில் அவரே விலைமகளி ராக மாறும் நிலை ஏற்பட்டுவிட்டது. அன்றும் இன்றும் உலகெங்கணும் உள்ள நிலை இதுதான். மேனாட்டுப் பெரியார் ஒருவர் கூறினார் :- நாம் கிருத்துமதக் கொள்கைப்படி ஒருவனுக்கு ஒருத்தியென வாழ்வதாகக் காட்டிக் கொள்வோம்.