பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தொல்காப்பிய ஆராய்ச்சி இந்நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை :- கல்வி வேண்டிய யாண்டு இறவாது - துறவறத்தினைக் கூறும் வேதாந்தம் முதலிய கல்வி வேண்டிய யாண்டைக் கடவாது; மூன்று இறவாது - அக் கல்வியெல்லாம் மூன்று பதத்தைக் கடவாது என்றவாறு. இறவாது என்பதனை இரண்டிடத்தும் கூட்டுக. மூன்று பதமாவன : அதுவென்றும் நீயென்றும் ஆனாய் என்றும் கூறும் பதங்களாம். அவை பரமும் சிவனும் அவ்விரண்டும் ஒன்றாதலும் ஆதலின் இம்மூன்று பதத்தின் கண்ணே தத்துவங்களைக் கடந்த பொருளை உணர்த்தும் ஆகமங்களெல்லாம் விரிவுமாறு உணர்ந்து கொள்க. இது மூன்று வருணத்தார்க்கும் கூறினார். ஏனைய வேளாளரும் ஆகமங்களானும் அப்பொருளைக் கூறிய தமிழானும் 'உயர்ந்தோர்க்குரிய' என்பதனான் உணர்க. இஃது இல்லறம் நிகழ்த்தினார் துறவறம் நிகழ்த்தும் கருத்தினராக வேண்டுதலின் காலவரையறை கூறாராயினார். இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுவதற்கும் தொல் காப்பியர் நூற்பாவுக்கும் என்ன தொடர்புளது? வேண்டிய ஆண்டைக் கடவாது என்று கூறிவிட்டுக் காலவரையறை கூறாராயினார் என்று கூறுவது எங்ங னம் பொருந்துமோ? ' வேண்டிய கல்வி மிக விளக்க மாக, வாழ்வுக்கு வேண்டிய கல்வி என்று பொருள் படும்போது வேதாந்தம் முதலிய கல்வி' என்று கூறு வது அனைவர்க்கும் பொருந்தாது. தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வேதாந்தம் கற்க விழைந்தனரா? விழைந்தாலும் வேதமுடையார் கற்க விட்டனரா? மூன்று வருணத்தார்க்கும் கூறினார் என்று நச்சினார்க்கினியர் கூறுவதிலிருந்து பெரும்பான்மை மக்களாம் வேளாளர் கற்பதற்கு உரிமை பெற்றிலர் என்பது தானே வெளிப்படுகிறதன்றோ? தொல் காப்பியர் தமிழர் அனைவர்க்கும் நூல் செய்தனரே