பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கூறப்பட்டுள்ளது. ஐந்திர வியாகரணமென்பது வட மொழியில் முதன் முதற்றோன்றிய இலக்கண நூல் என்பர். அது இந்திரனால் செய்யப்பட்டதால் ஐந்திரம் எனப் பெயர் பெற்றது என்பர். "ஆசிரியர் (தொல்காப்பியர்) நூல் செய்கின்ற காலத்து வழங்கிய வடமொழி இலக்கணம் ஐந்திரம் எனப்படுதலாலும், பாணினீயம் கேட்கப்படாமை யாலும், வடமொழிக்கு முதலிலக்கணம் ஐந்திரமெனவும் அதற்குப் பின்னேயே பாணினீயம் தோன்றிய தெனவும் வடமொழியாளர் கொள்ளுதலாலும் தொல் காப்பிய நூலானது வடமொழிப் பாணினீயத்திற்கு முற்பட்டதென்பது தானே போதரும்" இவ்வாறு பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை. M: A., M, L., கூறுகின்றார். இக் கருத்துடையோர் பலராவார். 1 மகா வித்துவான் பாஷா கவி சேகரர் இரா. இராகவையங்கார் தமது தமிழ் வரலாற்றில் (பக்கம் 351) கூறுகின்றார்: "ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்" எனப் பாயிரத்துக் கூறலான் இத் தொல் காப்பியனார் காலத்தே ஐந்திர வியாகரண வுணர்ச்சி சிறந்ததாக மதிக்கப்பட்டதென நினைதல் தகும். பரணர் பாடிய ஐந்தாம் பத்துக்கொண்ட செங்குட்டுவன் தம்பி யாகிய இளங்கோவடிகள் காலத்தே இவ் வைந்திர வியாகரணம் வழக்கற்று அருகியதென்பதும், அவர் காடுகாண்காதைக்கண், புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்” எனவும் தொல் - எழுத்து - ஈச்சினார்க்கினியர் உரை - முகவுரை பக்கம் - 3. இலக்கிய வரலாறு - பக்க ம்- 50.