பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தொல்காப்பிய ஆராய்ச்சி 8. மரபியல் செய்யுளுட்படும் பொருள்களையும் அவற்றை விளக்குவதற்குப் பயன்படும் உவமைகளையும் அறிந்த புலவர் சொற்களையும் அவற்றின் மரபினையும் நன்கு தெரிந்திருத்தல் வேண்டும். சொற்களுக்கும் வாழ்வு உண்டு; வளமுண்டு; தாழ்வு உண்டு: சாவு உண்டு. சொற்களின் வாழ்வும் தாழ்வும் மக்களையே சார்ந்துள்ளன. அவைகளைப் படைப்பவர்களும் காப்பவர்களும் அழிப்பவர்களும் மறைப்பவர்களும் வெளிப்படுத்துபவர்களும் புலவர்களே. சொற்களைப் பயன்படுத்தி வருகின்ற வழக்கத்தால் சொற்களுக்கும் தனித் தன்மைகள் ஏற்பட்டுவிடுகின்றன. உண்டான் என்பதும் தின்றான் என்பதும் பொருளால் ஒன்றேயாயினும் சோறு உண்டான், கறி தின்றான் என்றுதான் கூற வேண்டுமேயன்றி, சோறு தின்றான் என்றும் கறி உண்டான் என்றும் சொல்லுதல் மரபு அன்று. குட்டி என்பதும் கன்று என்பதும் விலங்குகளின் இளமைப் பெயர்தாம் என்றாலும் குரங்குக் கன்று என்றும் பசுக் குட்டி என்றும் சொல்லுதல் மரபு அன்று. குரங்குக் குட்டி, பசுக் கன்று என்றுதான் சொல்லுதல் மரபு. ஆதலின் வழக்கிலும் செய்யுளி லும் சொற்களின் மரபு அறிந்து பயன்படுத்துதல் தவிர்க்க முடியாத தொன்று. தன் கருத்தைத் தான்