பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 252 மக்களுக்கும் வழிகாட்டக் கூடியவர் புலவரே. புலவர் வழக்கைத்தான் பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமேயன்றி, பொதுமக்கள் வழக்கைப் புலவர் கள் பின்பற்றல் ஆகாது. பிற துறைகளில் எவ்வாறு இருப்பினும் மொழித் துறையில் புலவர்க்குத்தான் முதன்மையளித்தல் வேண்டும். ஆசிரியர் தொல்காப் பியர் அதனை நன்கு வலியுறுத்தி உள்ளார். " வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட்டு ஆக லான, ' 'நூல்' என்பது உயர்ந்த பேரறிவு உற்றோரால் எழுதப்பட வேண்டும். உலகச் சூழ்நிலையில் சிக்குண் டிருந்தாலும் புலவர் அதனில் அகப்படாமல், வீடு பட்டுக் காய்தல் உவத்தலின்றி நடுநிலைக் கண்ணோட் டத்துடன் புதிய கருத்துக்கள் பொதுள திறமான புலமையின் பயனாய் நூல் எழுதுதல் வேண்டும். அந் நூல் உலகத்திற்கே முதல் நூலாக முதலில் வெளி வந்ததாக இதுவரை வெளி வராததாக உலக நூல்களில் முதன்மை பெறக் கூடியதாக விளங்குதல் வேண்டும்.

  • " வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூல் ஆகும். இம்முதல் நூலைத் தொகுத்தும், விரித்தும், சில பகுதி களைத் தொகுத்தும், சில பகுதிகளை விரித்தும், இரண்டும் உடன்சேரவும், மொழி பெயர்த்தும் நூலியற்றலாம் என்றார். மொழி பெயர்க்குங்கால்' நாட்டின் மரபுக்கேற்பத் தழுவி இயற்றப்படல் வேண்டும். வேற்று நாட்டுக்குரிய மரபை வேற்று மொழியில் உள்ளவாறு தமிழ் நாட்டுக்குத் தமிழ் மொழியில் தருவதால் பெரும்பயன் விளையாது. தமிழ் வழக்கும் சிதைவுறும். நாட்டுக்குப் பொருந்