பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 285 ராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேர றிஞரும். இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத் தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே நம்நாடும் எல்லா நிலைகளிலும் நம்மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும். அப் பொழுதுதான் நம் தமிழ் என்றுமுள - எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும். தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது. தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல் காப்பியத்தால் மொழி நிலை- இலக்கியநிலை மட்டு மன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். இவ் வாராய்ச்சி நூல் தொல்காப்பியர் கால மொழியின் சிறப்பையும் இலக்கியவளச் சிறப்பையும் எடுத்துக் காட்டும். தொல்காப்பியர் கால மக்கள் வாழ்வு பற்றித் தனியாக ஒரு நூலில் ஆராய எண்ணியுள் ளோம். தமிழ் மக்கள் வரலாறு அறிவதற்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் பெருந்துணையாக உள்ளன. பண்டைத் தமிழ் மக்கள் வரலாற்றை அறிவதற்கு இவையன்றிப் பிற சான்றுகளை நாம் பெற்றோம் இல்லை. எனவே தமிழக வரலாற்றின் முதற் பகுதியே இந்நூல் எனக்கொள்ளுதல் தகும்.