பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தொல்காப்பிய ஆராய்ச்சி முறைக்கும் மேலைநாட்டு மொழிகளின் எழுத் தமைப்பு முறைகளுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு. உயிரையும் மெய்யையும் சேர்த்து எழுதும் முறையில்தான் காணலாம். உயிரையும் மெய்யையும் சேர்த்து எழுதும் இடங்களிலும் மேலை நாட்டு மொழிகள் உயிரையும் மெய்யையும் தனித்தனியே தான் எழுதுகின்றன. Talk' என்ற ஆங்கிலச் சொல்லில் 'T' என்ற மெய்யும் 'டீ' என்ற உயிரும் தனித்தனியே எழுதப்பட்டுள்ளன. தாக்கு' என்ற தமிழ்ச் சொல்லில் 'த்' என்ற மெய்யும் 'ஆ' என்ற உயிரும் தனித்தனியாக எழுதப்படாமல் சேர்த்தே எழுதப்பட்டுள்ளன. முருகன்' என்ற தமிழ்ச் சொல்லை ஆங்கில முறைப்படி எழுத வேண்டு மென்றால் ம் உர்உக்அன்' (Murukan) என்று எழுதவேண்டும். இவ்வாறு எழுதுவதால் காலச் செலவும் இடப் பெருக்கமும் மிகுதியாக வேண்டப் படுகின்றன. ஆகவே உயிரையும் மெய்யையும் ஒன்றாக்கி உயிர்மெய்' எனப் பெயரும் கொடுத் தனர். உயிர்மெய்க்குப் புதிய வடிவம் படைக்காமல், மெய்யின் வடிவில் சிறு சிறு மாற்றங் களைச் செய்துகொண்டனர். ஆகவே உயிர்மெய் வடிவங்களைப் புதியனவாகக் கொண்டு கணக்கிடுதல் தவறு. அவ்வாறு கணக்கிடுவதனால் பன்னிரண்டு உயிர்களும் பதினெட்டு மெய்களுடன் சேர இருநூற் றுப் பதினாறு (12 × 18) வடிவங்கள் உண்டாகின்றன எனக் கூறவேண்டியுளது. இம்முறையில் கணக்கிட்டுத்தான் தமிழின் வரிவடிவங்கள் இருநூற்று நாற்பத்தேழு என்கின்றனர். (உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1, உயிர் மெய் 216 - 247). இவ்வாறு கூறுதல் தொல்காப்பியர் நெறிக்கு முரண்பட்டது. . சிறு சிறு மாறுதல்களைக்