பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 77 வருமொழி முதலில் நிற்கக் கூடிய மெய்கள் வல்லினத்தில் க, ச, த, ப : மெல்லினத்தில் ஞ, ந, ம ;" இடையினத்தில் ய, வ; பிற மெய்கள் மொழிக்கு. முதலில் வாரா. இங்ஙனம் வாரா என ஒதுக்கப் பட்டவற்றுள் சில வருமேல், அவை ஊர்ந்து வரும் சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல என அறியலாம். புள்ளி மயங்கியல்' என்பது நிலைமொழி யிறுதியில் மெய்யெழுத்து நின்று வரு மொழியுடன் தொடர்புகொள்ளும் நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுவ தாகும். மெய்யெழுத்தைப் 'புள்ளி' என்று அழைக் கின்றார். புள்ளி பெற்று வருவதே மெய்யெழுத்தின் தன்மையதாகும். புள்ளி பெறும் எழுத்தைப் புள்ளி என்றே அழைப்பது ஆகு பெயர். ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள' என்ற பதினோரு மெய்களே சொல்லின் இறுதியில் நிற்கும் என்று மொழி மரபில் கூறினார்.* அவ்வரிசையிலேயே 'ஞ' முதலாகத் தொடங்கி ஒவ்வொரு மெய்யிறுதி யும் கூறிச் செல்கிறார். . அகர வரிசை பற்றிக் கூறும் முறை தொல் காப்பியர் காலத்திலேயே தமிழர் அறிந்திருந்தனர் என்பது தொல்காப்பியத்தால் அறியக் கிடக்கின்றது. உயிர் மயங்கியலும் புள்ளி மயங்கியலும் தெற்றெனக் காட்டி நிற்கின்றன. குற்றியலுகரப் புணரியல்' என்பது நிலைமொழி இறுதியில் குற்றியலுகரம் நின்று வருமொழிகளோடு சேருங்கால் உண்டாகும் மாறுதல்களைக் கூறுகின்றது. தமிழ்ச் சொற்களி னிறுதியில் வல்லெழுத்தாறும் வருதல் இல்லை. ஆனால் அவை உகரத்தோடு சேர்ந்து சொல்லிறுதியில் 1. ** மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (தொல். எழுத்து-சூ. 15) 2. " ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் அப்பதினொன்றே புள்ளி யிறுதி (தொல். எழுத்து-ரூ. 78.). .