பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சொல ை . i i 514–30 ஏனை யிரண்டு மேனை யிடத்த. 30 515-31 யாதெவ னென்னு மாயிரு கிளவியும் அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும். 31 515–32 அவற்றுள் யாதென வரூஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயி னையந்தீர் தற்குத் தெரிந்த கிளவி யாதலு: முரித்தே. 32 பா.வே. 1. தீர்த்தற்குத் - பதிப்பு 78இல் கொள்ளப்பட்டது. சுவடிச்சான்றில்லை. 2. யாகலு - சுவடி 34, 105.1 பதிப்பு 8 5 17-off இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவி வினைப்படு தொகையி' னும்மை வேண்டும். 3.7 பா.வே. o 1. தொகுதியி - சுவடி 73, 115.பதிப்பு 3,4,9,16 இளம்பூரணர் தவிர ஏனையோர் கொண்ட பாடம். 5 18–34 மன்னாப் பொருளு மன்ன வியற்றே. 34 515-35 எப்பொரு ளாயினு மல்ல தில்லெனின் அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல். &#5

  • புலிசை ஏட்டில் (திருப்பாதிரிப்புலியூர் மடாலயச்சுவடி) சினை முதற்கிளவிக்கு என்று பாடம் இல்லை. சினைமுதற்கிளவி என்றே பாடம் உள்ளது. தெய்வச்சிலையார் சினை முதற்கிளவி என்று பாடந் தந்து சினைக் கிளவியும். முதற்கிளவியும் என்று உரை கூறியுள்ளார். நன்னூலாசிரியரும் இனைத்தென்றறிபொருள் என்றே நூறபாக செய்துள்ளார். அதனால் சினைமுதற்கிளவி என்ற பாடமே நன்றாயிருக்கும். அடுத்த நூற்பா மன்னாப் பொருளும் என்றே பாடம் உள்ளது. அடிகள். (பதிப்பு 76 பக். 43)

கிளவி இளம்பூரணர் பாடம் என்பது கா. நமச்சிவாய முதலியார் தரும் அடிக்குறிப்பு (பதிப்பு 18) இக்காரணங்களை ஏற்று இப்பதிப்பில் கிளவி என்ற பாடமே ஏற்கப்பட்டுள்ளது. ப.வெ.நா.