பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 O சொல்லதிகாரம் 671-187 தாமென் கிளவி பன்மைக் குரித்தே' 30 பா.வே. 1. கிளவிப் - சுவடி 951 சந்திப்பிழை. எழுவாய்த் தொடர். 2. பன்மைக்கு முரித்தே - சுவடி 1052 பிழை. உம்மை பொருந்தாது. 672-183 தானென்' கிளவி யொருமைக் குரித்தே' 31 பா.வே. 1. தான்.யென் - சுவடி 48. சந்திப்பிழை. 2. யொருமைக்கு முரித்தே - சுவடி 1052 பிழை. உம்மை பொருந்தாது. 673-189 எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே. ፵2 இந்நூற்பாவையும் அடுத்ததையும் தெய்வச். இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்கிறார் 674-190 தன்னு ளுறுத்த பன்மைக் கல்ல(து) உயர்திணை மருங்கி னாக்க மில்லை. 3. 575–19 1 நீயிர்' நீயென வரூஉங் கிளவி பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள. 34 பா.வே. 1. இா - பதிப்பு 76 676-192. அவற்றுள் நீயென் கிளவி யொருமைக் குரித்தே' 35 தெய்வச் இந்நூற்பாவையும் அடுத்ததையும் இணைத்து ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளார். பா.வே. 1. ஒருமைக்கு முரித்தே - சுவடி 1052 பிழை உம்மை வேண்டப்படாதது. + தொல், எழுத்து. அல்லதன் மருங்கின் (327) என்னும் நூற்பா தும் என்பது நீஇர் எனத் திரிந்ததென்று தெளிவாகக் கூறுகின்றது. நீஇர் என்னும் பழைய வடிவத்தை மறந்த பிற்காலத்தார் இச்சொல்லிலுள்ள இகரத்தை நீக்கி நீர் என்றும். இகரத்திற்கு யகர வகர வுடம்படுமெய்யைக் கொடுத்து நீயிர். நீவிர் என்றும் பிழைபட வழங்கலாயினர்." அடிகள் பகிப்ப 78. (பக். 1841