பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினையியல் 6. வினையியல் 685-201 வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளது நினையுங் காலைக் காலமொடு தோன்றும். 686-202 காலந் தாமே மூன்றென மொழிப. பா.வே. 1. தானே" - சுவடி 951 தவறில்லையாயினும் சிறப்புமில்லை. 687-203 இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா(ல்)" அம்முக் காலமுங் குறிப்பொடுங்’ கொள்ளும் மெய்ந்நிலை" யுடைய தோன்ற லாறே. பா.வே. 1. னெதிர்வு யென்றா - சுவடி 73, இன் சாரியை கொள்ளல் சிறப்பு. 2. குறிப்பொடு - சுவடி 115 பதிப்பு 4. பதிப்பு 76இல் சு.வே. எச்சஉம்மை வேண்டியுள்ளது. எனவே இப்பாடம் பிழை. 3. மெய்ன்னிலை - சுவடி 48, எழுத்துப்பிழை. ந்நி>ன்னி 688-204 குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொ லெல்லாம் உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையும்' ஆயிரு திணைக்கு மோரன்ன வுரிமையும்' அம்மூ வுருபின தோன்ற லாறே. பா.வே. 1. உரியவும் - சுவடி 1052, பதிப்பு 76 2. வுருவின - சுவடி 1, 115 பதிப்புகள் 49, 76 13.3 -_ + பலவகைப்படும் ஒன்றைப் பன்மைச்சொல் கொடுத்துக் கூறும் இயல்பு ஆசிரியர்க்கு உண்டு. எழுத்து எனப்படுப (நூன் 1). வேற்றுமே தாமே (வேற்.1) என்பன காண்க. காலம் என்பது வடிவ வேறுபாடுடையதன்று. ஆதலின் காலந்தானே என ஒருமையிற் கூறல் வேண்டும். அவ்வாறின்றிக் காலந் தாமே எனப் பன்மையிற் கூறியதால் காலப்பாகுபாட்டை ஆசிரியர் உடன்பட்டார் என்பதும் புலப்படும். ஆ.சி. பதிப்பு 68 பக். 10.