பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினையியல் 1.37 அன்மையி னின்மையி னுண்மையின் வன்மையின் அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியுங் குறிப்பே காலம். 15 701-217 பன்மையு மொருமையும் பாலறி வந்த(வ்) அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி யுயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. 17 பா.வே. 1. மேலக் - பதிப்பு 7.6 எதுகை நோக்கிய அகரப் போலி. 702-218 அஆ வஎன வரூஉ மிறுதி(ய்) அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை 18 டி இதன் இறுதி மூன்று அடிகளையும் சேனா. நச்சர் தெய்வச் தனிச் சூத்திரமாகக் கொண்டுள்ளனர். தெ.பொ.மீ கல்லாடர் பதிப்பில் 7 அடிகளைக் கொண்ட ஒரே நூற்பாவாகவும். கழகக் கல்லாடர் உரையில் 4, 3 அடிகளைக் கொண்ட இரண்டு நூற்பாக்களாகவும் உள்ளன. அடிகள். தம் சொல்லதிகாரப் பதிப்பில் (78) அடுத்த நூற்பா நான்கு அடிகளையும் இத்துடன் சேர்த்து 11 அடிச் சூத்திரமாகத் தந்துள்ளார். அவர் குறிப்புரைகள் வருமாறு: "11 அடியும் புலிசை, துறைசை ஏடுகளில் ஒரே நூற்பா (பக். 181) "அதுச்சொல் வேற்றுமை என்று தொடங்கும் இந்நூற்பா ஏட்டில் பன்மையும், ஒருமையும் என்ற நான்கடி நூற்பாவுடன் சேர்த்தெழுதப்பட்டுப் பதினொரு அடி நூற்பாவாக உள்ளது. பின்னர் அஃறிணைக் குறிப்புவினையைக் கூறும் இன்றிலவுடைய என்னும் நூற்பாவும். பன்மையும் ஒருமையும் என்ற நான்கடி நூற்பாவுடன் சேர்த்தே எழுதப்பட்டுள்ளது. இந்த முறையைக் கருதினால் அதுச்சொல் வேற்றுமை என்ற நூற்பாவில் பன்மையும் ஒருமையும் என்ற நான்கடி நூற்பா ஏட்டில் சேர்த்தெழுதப்பட்டு ஒரே நூற்பாவாகக் கருதப்பட்டுள்ள முறை பொருத்தமானதென்றே புலப்படுகின்றது. ஆனால் ஏட்டிலும், கா.ந. பதிப்பிலும், கழகப் பதிப்பிலும் பன்மையும் உயர்திணை மருங்கின் (வினை. 17) என்ற நூற்பா மீண்டும் எழுதப்பட்டு உரையும் எழுதப்பட்டுள்ளது. இவ்வுரைக்கு நுதலியதில்லை யாதலால் இளம்பூரணர் உரையா என்ற ஐயம் எழுகின்றது. (பக். 183) இளம்பூரணர் இந்நூற்பாவை 7 அடிகளைக் கொண்டதாகவே கருதியிருப்பதாகப் பல சுவடிகளால் அறிய முடிகிறது. காலப் பழமைபற்றி அந்த வடிவமே இந்தப் பதிப்பில் ஏற்கப்படுகிறது. தோன்றும் கொள்ளும் என்னும் இரு பயனிலைகள் பயின்றபோதும் ஒன்றாகவே இங்கு தரப்படுகிறது. ப.வெ.நா.