பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினையியல் 1 & 9 1. சுவடி 73 இல் இவ்வடி எழுதப் பெறவில்லை. 2. மேலக் - பதிப்பு 7.6 எதுகை நோக்கிய அகரப் போலி. 707-223 முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி(ய்) இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன" செய்யுஞ் செய்த வென்னும் அம்முறை நின்ற வாயெண் கிளவியும் பிரிவு வேறு படுஉஞ் செய்திய வாகி(ய்) இருதினைச் சொற்கு மோரன்ன வுரிமைய. 23 பா.வே. 1. இன்மைச் செப்பல் - சுவடி 48 உறழ்முடிபு 2. செய்மன - சுவடி 48, 1053 பிழை. மகரவொற்று விடுபட்டது. 3. பிரிபு - சுவடி 115, 951, 1053 பதிப்புகள் 3.49 திரிபு - சேனா, கல்லாடர் பாடம். பிரிபு - நச்சர். தெய்வச். பாடம் - பதிப்பு 68 இல் சு.வே. பிரிபு - (கல்லாடர் நச்சர் ஏடு); திரிபு - (சேனா தெய்வச். ஏடு) பதிப்பு 76இல் சு.வே. 708-224 அவற்றுள் இஐ ஆயென வருஉ மூன்றும் ஒப்பத் தோன்று மொருவர்க்கு மொன்றற்கும். பா.வே. 1. ஆவென - சுவடி 48 சந்திப்பிழை. ஆய்+என - ஆயென 2. மொருவற்கு - சுவடி 951, 1052 பதிப்புகள் 3.9.18.49 என்னும் பொருள்பட அமைந்த சூத்திரம் ஒன்று இருந்து கெட்டிருத்தல் வேண்டும். என்னை? பொருள்பற்றி ஒதிய பின்னரே சொற்களை எடுத்தோதி முடித்தல் இவ்வாசிரியர் முறைமையாதலானும், அவை இந்நூலுள்ளும் சான்றோர் இலக்கியத்தும் பயின்று வருதலானும் என்க" என்கிறார். (பக். 237)

  • ஒருவர்க்கும் என்றது உயர்தினை ஆண்பாலையும் பெண்பாலையும் குறித்த பன்மைக் கிளவி. இதனை நச்சர் உயர்திணை ஆண்பாலும் பெண்பாலுமாகிய ஒருமைப்பாற்கும் எனத் தெளிவுபடக் கூறுவார். சேனா. ஒருவற்கும் ஒருத்திக்கும் ஒன்றற்கும் எனச் கட்டுவார். இந்த நூற்பாவில் ஒருவற்கு என்னும் ஒருமைச் சொல் பொருந்தாது. பதிப்பு 82இல், ஒருவர்க்கும் ஒருத்திக்கும் ஒன்றற்கும் என உள்ளது அச்சுப்பிழை. இங்கு ஒருவற்கும் என ஒருமையே இருத்தல் வேண்டும். ப.வெ.நா.