பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV 1 இளம்பூரணரும் நச்சரும் செய்யுளியலின் மனையோள் கிளவியும் (1455) என்னும் நூற்பாமுதல் இது நனி பயக்கும் (1452) என்னும் நூற்பாவரை கொண்டுள்ள முறைவைப்பிலிருந்து பேராசிரியர் சிறிது வேறுபடுகிறார். இப்பிறழ்ச்சிக்குக் காரணம் தெரியகிற்றிலது. விட்டிசைத்தல் உயிரெழுத்துக்களை விட்டிசைத்த நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் ஆங்காங்குளவென்பது தெரிந்த செய்தி. எனினும் ஒரு சீரில் முதலசை விட்டிசைத் திருப்பினும் அடுத்த அசை உயிராயின் விட்டிசைத்தவாறே நிற்றலும், உடம்படுமெய் பெறலும், பிறவாறும் ஒரு நெறியின்றிக் காணப்படுதல் கண்கூடு. ஆகவே அவை வந்த இடங்கள் சண்டாய்வு செய்யப்பெறும். 1. நூ. 26இல், கசஞப மயவவ் வேழும் உரி. வ + ஏழு உடம்படுமெய் பெற்றது. 2. நூ. 54இல், ஆஎ ஒஎனும் மூவுயிர் வெள்ளை. அடிகள். வ.சுபமா ஆகியோர் ஒவெனு எனக்கொண்டுள்ளனர். இது ஒவ்வெனும் என இருத்தல் நேரிது. 3. நூ. 71இல், எ என வருமுயிர் அடுத்த நூற்பா (72) ஒவ்வுமற்றே ஒ உம் என்பது ஒவ்வும் என வந்ததைப் போல எ + என என்பதை எவ்வென என்று புணர்தல் தகும். 4. நூ. 86இல் இச எஏ ஐயென விசைக்கும் ஐ + என, உடம்படுமெய் பெற்று நின்றது. 5. நூ. 87 இலும். உஊ ஒஒ ஒளவென இசைக்கும் என்புழி ஒள என, உடம்படு மெய் பெற்று நின்றது. 5. நூ. 327இல் இஇடை நிலைஇ என்பதனைப் பதிப்புக்களில் இஇடை இயிடை இய்யிடை என்ற மூன்று நிலைகளிலும் காண்கிறோம். இய்யிடை என்பதே நேரிது. 7. நூ. 454இல் ஊஆ ஆகும் என்பதன் விட்டிசைத்த ஊஆ உடம்படு மெய்பெற்ற ஊவா என்னும் இருவடிவங்களும் பதிப்புக்களில் காணக் கிடைக்கின்றன. 8. நூ. 493, 702 இரண்டிலும், அ ஆ வ என வரூஉம் இதனை வல்வென எனப் புணர்த்தலே நேரிது. 9. நூ. 641இல், தநது எளன: நூ. 894இல் தநது எஎனும், ஆ.சி. விட்டிசைத் தமைக்கப்பட்டுள்ள முதலிரு சீர்களையும் தந்துவ் வெவ்வென என்றெழுதியுள்ளார். முதற்சீரை விட்டிசைத்தும் எஎன வென்ற இரண்டாஞ்சீரை எவ்வென வென்று புணர்த்தும் கோடல் பொருந்தும். அடுத்துள்ள நூற்பாவில் தது வெவெனு என்றெழுதினார் சிவலிங்கனார். இரண்டாவது சீரை எவ்வெணு என்று புணர்த்தல் நேரிது.