பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F & O சொல்லதிகாரம் 803-319 கெடவரல் பண்ணை யாயிரண்டும் விளையாட்டு. 22 804-320 தடவுங் கயவு நளியும் பெருமை. 2.3 805-321 அவற்றுள் தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும். 24 இதனையும் அடுத்த இரு நூற்பாக்களையும் தெய்வச் ஒரே துத்திரமாகக் கொண்டுள்ளார் 806-322 கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்.' 25 பா.வே. 1. ஆகும் - பதிப்பு 3.16 பதிப்பு 14.38 இல் க.வே. டி அடிகள் பதிப்பு 78இல் மென்மையுமாகும் என்பது சேனா பாடம் என அடிக்குறிப்புத் தருகிறார் (பக். 252). ஆனால் பதிப்பு 4இல் மேன்மையுஞ் செய்யும் என்றே காணப்படுகிறது. பதிப்பு 75இல் சேனா. உரையில் மேன்மை என்றே உள்ளது. இவற்றால் மேன்மை என்பதே சேனா பாடமோ எனத் தோன்றுகிறது. சுவடி எழுத்தில் எகரக் ஏகாரக் குறிகள் வேறுவேறாக இல்லாமல் ஒற்றைக் கொம்ட மட்டுமே இருக்கும். படிப்பவர்களே இடம் நோக்கிக் குறிலாகவோ, நெடிலாகவோ கொள்ளவேண்டும் . இத்தகைய ஐயம் நேருங்கால் பழைய இலக்கிய ஆட்சிகளை உற்று நோக்கிப் பாட நிர்னயம் செய்யவேண்டும். கய என்னும் சொல் நற்றிணையில், கயந்தலை மடப்பிடி உயர்குபசி களைஇயர் (137:3) எனவும். குறுந்தொகையில், முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி (3941) எனவும், மருதக்கலியில், கைபுனை முக்காழ் கயந்தலை தாமு(21:2) எனவும். அகநானூற்றில், கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணி (121:5) எனவும். புறநானூற்றில் கயத்தலை மடப்பிடி புலம்ப (303:8) எனவும். பத்துப்பாட்டின் மலைபடுகடாத்துள் கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி (அடி 307) எனவும் வருகின்றது. கலித்தொகை மலைபடுகடாம் ஆகிய இரண்டின் உரைகளிலும் நச்சர் மெல்லிய தலையினையுடைய என்றே பொருள் கூறுகிறார். புறம் முதலிய நூல்களுக்குப் பிற்கால உரையாசிரியர்கள் கொண்ட பொருளும் மெல்லிய என்பதேயாகும். இவற்றையெல்லாம் ஒருங்கே உற்று நோக்குமிடத்துப் பழந்தமிழில் கயந்தலை மடப்படி என்பது ஒரு மரபுத்தொடர் என்றும். அது மென்மையான தலையையுடைய கன்றினையோ அல்லது பெண் யானையையோ குறிக்கும் என்றும் அறிகிறோம். பிறகு கயத்தலை என்னும் தொடரே யானைக்கன்று என்ற பொருளில் வரும் என்பதையும் பிங்கலத்தை காட்டுகிறது. இங்கும் மென்மையான தலையையுடைய இளைய யானைக்கன்று என்பதையே கட்டுகிறது. /தொடர்ச்சி அடுத்த பக்கம்/