பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியியல் 153 821-337 ஏற்ற நினைவுத் துணிவு மாகும். 40 பா.வே. எற்றம்" - பதிப்புகள் 27, 8, 9, 16 822-338 பிணையும் பேணும் பெட்பின் பொருள. 41 பதிப்பு 4 இல் பினையும் என்றிருப்பது அச்சுப்பிழை. 823-339 பனையே பிழைத்தல் பெருப்பு மாகும். 42 824-340 படரே யுள்ளல் செலவு மாகும். 43 825-341 பையுளுஞ் சிறுமையு நோயின் பொருள. 44 826-342 எய்யா மையே யறியா மையே! 45 பா.வே. 1. எய்யாமை அறியாமை - பதிப்பு 18, 78. பதிப்பு 38 இல் சு.வே. எய்யாமைய்யே அறியாமைய்யே - சுவடி 11, 115. எழுத்துப்பிழை. 127-343 நன்று பெரிதாகும். 45 328-344 தாவே வலியும் வருத்தமு மாகும்." 47

  • அடிகள் குறிப்பு :

" கானலம் சேர்ப்பன் கொடுமை எற்றி" (குறுந் 145) என்பதை நோக்கினால் எற்றம் என்ற பாடமே நன்று. நச்சர். பாடமுமது. சேனா. தெய்வக் உரைகளில் ஏற்றம் என்ற பாடம் உள்ளது. பிரயோக விவேக நூலார் சமாசப் படலத்தில் முன்மொழியெண்ணக் கருமதாரயனைக் கூறும்பொழுது திருவள்ளுவரும், தொல்காப்பியனாரும், எண்ணித் துணிக கருமம்' எனவும். "ஏற்றம் நினைவுந் துணிவு மாகும்" எனவும் கூறினாராகலின் ஒரு பொருளை எண்ணும்பொழுது ஒன்றாகவும். துணியும்பொழுது வேறொன்றாகவும் கொள்க’ என்று கூறுமிடத்து ஏற்றம் என்றே பாடங்கொண்டு நினைவும் துணிவும் வெவ்வேறு என்று கூறுகின்றனர்." (பதிப்பு 76 பக். 258) . "சேனா முதலியோரெல்லாம் இந் நூற்பாவினை. எய்யா மையே அறியா மையே என்று அளவடியாகப் பாடம் ஒதுவர். ஆனால் திவாகரம் "எய்யாமை அறியாமை ஆகும் என்ப" என்று கூறுவதையும், பிங்கலமும் அவ்வாறு கூறுவதையும் கருதினால் இளம்பூரணர் பாடமே பழைய பாடமாகும். "அடிகள். (பதிப்பு 76 பக். 280)

  • பதிப்பு 75. 78 இரண்டிலும் நன்று பெரிதாகும், தெவுக் கொளற் பொருட்டே, தாவே வலியும் வருத்தமு மாகும். தெவ்வுப் பகையாகும் என்ற வரிசை அமைந்துள்ளது. இதனை விடத் தெவு, தெவ்வை அடுத்தடுத்து வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதாலும். சுவடி 73, 115 இரண்டின் சான்றும். பழைய பதிப்புகளின் சான்றும் இருப்பதாலும் இப்பதிப்பில் இந்த வரிசை மேற்கொள்ளப்படுகிறது.