பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19.3 பொருளதிகாரம் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த வொண்பொருள் முடியவும்" பிரிவே." 30 பா.வே. 1. முதலாகச் - சுவடி 1, 16, 34, 74, 502, 1054 வெள்ளைப்பாடம் 2. முற்றவும் - சுவடி 105A 978–31 மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே. 3 I 979–32 மன்னர் பாங்கிற் பின்னோ ராகும். 3.2 98 0–3.3 உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான. 3.3 + மேவிய சிறப்பின் என்ற நூற்பாவில் கூறப்பட்ட இருவகைக் காவற்கும் உரியாரைக் கூறிய பின்னர் நிறுத்த முறையே பொருள்வயிற் பிரிவுக்கு உரியாரைக் கூறுதலே முறையாகலின் மன்னர் பாங்கின் என்னும் நூற்பாவையடுத்து. பொருள்வயிற் பிரிதலு மவர்வயி னுரித்தே என்னும் நூற்பாவும். உயர்ந்தோர் பொருள்வயி னொழுக்கத் தானே என்னும் நூற்பாவும் இருத்தலே பொருத்தமாகும். இங்ங்னமன்றி. ஒதற்பிரிவு கூறும் உயர்ந்தோர்க்குரிய வோத்தினான என்னும் நூற்பாவும். வேந்தர்க் கோதப்பட்ட பல. பிரிவுகளும், குறுநில மன்னர்க்குரியன என்று கூறும் வேந்து வினையியற்கை என்னும் நூற்பாவும் காவற்பிரிவுக்கும் பொருள்வயிற் பிரிவுக்கும் இடையில் இடம்பெறுதல் பொருத்தமற்றதாகும். உரையாசிரியர்கள் தத்தம் கருத்திற்கேற்ப இரண்டு நூற்பாக்களை யொன்றாக்கியும். ஒன்றனை யிரண்டாகப் பிரித்தும் பொருள் கூறுதல் போல, இவ்வுரையாசிரியர்கள் காலத்திற்கு முன்பே இவ்விரு நூற்பாக்களும் யாராலோ எக்காரணத்தாலோ இங்கு இடம்பெற்று விட்டன. இஃது ஆசிரியர் எடுத்துக் கொண்ட பொருளைத் தொகுத்தும் வகுத்தும் கூறுகின்ற முறைக்கு மாறுபட்டதாகும். மு.அ.பிள்ளை (பதிப்பு 5.0) (பக் 326 - 327) சோம. இந்நூற்பாவையும் அடுத்ததையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு கூறுவதாவது: பிரிவைந்தனுள் பொருளும் போரும் எல்லார்க்கும் பொது. ஒதலும் துாதும் அடியார் முதலிய கீழோரை விலக்கி மற்ற நானில மேன்மக்களுக்குரிய என்பதை மேல் 25, 26 ஆம் சூத்திரங்கள் கூறின. நாடுகாவற்பிரிவு மன்னரோடு சேர்ந்து சிறந்தார்க் குரித்தென 25ஆம் சூத்திரமும், அக்காவற்பிரிவு நானில மேன்மக்களுக்கு முரித்தென 29ஆம் தத்திர மும் மொழிந்தன. இனி, மன்னரொடு சிவணிச் சிறந்த மேலோர் மன்னர்பொருட்டுப் பகைமேற்கொண்டு பிரிதல் மேல் 27ஆம் ஆத்திரத்திலும். காவலும் பொருளும் பற்றிப் பிரிதல் 28ஆம் ஆத்திரத்திலும் கூறப்பெற்றன வாதலின். அம்மூன்றுமொழியத் துாது முதலிய பிறவுயர்ந்தோர் வினை பற்றிய பிரிவனைத்தும் மன்னர் பாங்கிற் பின்னோராய அனைவர்க்குரித்தாம் என்பதை இவ்வொழிபுச் சூத்திரத்தில் இந்நூலார் கூறினார். அன்பு. அறிவு. ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப் பார்க்கின்றியமையாத, மூன்று என்பது வாய்மொழி. அதனால் மதிநுட்பம் நூலோடுடைய உயர்ந்தோர்க்கன்றி மற்றையோர்க்குத் துாது போல்வன கூடாமை ஈண்டு விளக்கப்பட்டது. (தொ.அ.ப./