பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 பொருளதிகாரப் பா.வே. 1. மாவருந் தானை' - பதிப்பு 84 2. கமுநிலை - சுவடி 9, எழுத்துப்பிழை, ளி>நி 3. அதனைக்குரி - சுவடி 1055 பிழை தகரம் ിങ്ങ് 4. வருந்தார் - சுவடி 34. வினைத்தொகை வடிவே சிறப்புடைத்து. 5. நிலமையும் - சுவடி 34. பிழை பொருந்தாப் பாடம். 6. நாடவர்க் - சுவடி 115. எழுத்துப்பிழை ற் >ர்க் 7. கால்கோள் - நச்சர். சோம. பால. பாடம். 8. நடுகல் - சுவடி 1, 9, 34, 53, 73, 1 06A II 5, 130, 1054, 1066 பதிப்பு 2, 7, 17 பதிப்பு 38 சு.வே. 9. ர்ேத்த. - பதிப்பு 24 இல் அச்சுப்பிழை, உரையில் சீர்த்தகு எனவே பாடம் 10. சிற்ப்பிற் - நச்சர் பால. பாடம்; 11. வகையிற் - நச்சர் சோம. பால. பாடம். 12. மூவேழ் - சுவடி 9, 53, 115 பதிப்பு 17இல் சு.வே. டி "தானை மறவரது மறமேயன்றி யானை மறமும், குதிரை மறமும் தம்பைத் திணைக்கண் துறைகளாக அமைந்து வருதலின் மாவருந் தானையர் என்றார். மாபெருந் தானையர் எனப் பாடங் கொள்வாருமுளர். அப்பாடத்திற்குச் செய்யுளுறுப்பாகிய நோக்கு இன்மையான் அப்பாடம் சிறவாமை அறிக" (பால. பதிப்பு 84 பக். 145) "புறத்திணையியலுள் வெறியறி சிறப்பின் (து.62) என்னும் நூற்பாவின்கன் ஐந்தாவது அடி மாபெருந் தானையர் மலைந்த பூவும் என்றுள்ளது. நச்சர் உரையை கன்றி நோக்கின் அவர் மாபெரும் தானை என்றே பாடங்கொண்டார் என்பது விளங்கும்" (த.நூ.பா.வே. பக். 77) இப்பகுதிக்கு நச்சர். "மா வரும் புகழ் ஏந்தும் பெருந்தானையர் - மா முதலியனவற்றால் தமக்கு வரும் புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெரும்படையாளர்" என்றே உரை கூறுகிறார். இதனால் மா வரும் என்பதே நச்சர். கொண்ட மூலபாடம் என்பது உறுதியாகிறது. பதிப்பாசிரியர்கள் மூலத்தையும் உரையையும் ஒப்பிட்டுப் பார்க்காததால் மூலத்தில் மாபெரும் எனவும். உரையில் மாவரும் எனவும் இருவேறு விதமாக அமைந்து விட்டது. ப.வெ.நா. "சீர்த்த மரபில் (பொருள் 63) என்பதற்குச் சீர்த்தகு சிறப்பின் எனப்பாடங்கொண்டார் நச்சர். கு என்ற எழுத்துச் சேர்க்கையோடு பொருள் வேறுபாடும் சொல்மாற்றமும் இங்கு அமைந்துள்ளன". வெ.ப, (பக் 27) தொடர்ச்சி அடுத்த பக்கம்/