பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் 205 1011-64 வஞ்சி தானே முல்லையது புறனே. E. இளம்பூரணர் இந்நூற்பாவையும் அடுத்ததையும் இணைத்து ஒரே சூத்திரமாகக் கொண்டார். 1012-55 எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. 7 1013-66 இயங்குபடை யரவ மெரிபரந் தெடுத்தல் வயங்க லெய்திய பெருமை யானுங் கொடுத்த லெய்திய கொடைமை யானும் அடுத்துளர்ந் தட்ட கொற்றத் தானும் மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருளின் றுய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனலைக் கற்சிறை போல(வ்) ஒருவன் றாங்கிய பெருமை யானும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வுங் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே. 8. 1014-67 உழிஞை தானே மருதத்துப் புறனே. 9 இளம்பூரணர் இதனையும் அடுத்ததையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொண்டுள்ளார். பா.வே. 1. மருதத்திற் - சுவடி 115. பிழை. பொருந்தாப்பாடம். பதிப்பு 24இன் மூலத்தில் இச்சீர் சீர்த்த (பக் 59 வரி 3) என்றிருந்த போதிலும் உரைப்பகுதியில் சீர்தகு மரபின் (பக். 73 வரி 30) என்றே காணப்படுகிறது. பதிப்பு 61இன் இளம்பூரணப் பகுதியிலும் இவ்வாறே உள்ளது. இதனால் இளம் கொண்ட மூலபாடம் சீர்த்தகு என்பதே என உறுதியாகிறது. பதிப்பு 24இன் மூலபாடப் பகுதியில் அச்சுப்பிழையாகக் குகரம் விடுபட்டுப் போயிற்று எனலாம். இதனால் இப்பாடபேதம் ஒர் எழுத்தின் சேர்க்கையால் அமையவில்லை. ஆனால் ஒர் எழுத்தின் விடுபாட்டால் (அதுவும் அச்சுப்பிழையால்) நேர்ந்தது என்பது புலப்படுகிறது. ப.வெ.நா.