பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பொருளதிகாரம் 1039-92 கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலும் அடுத்துார்ந் தேத்திய வியன்மொழி வாழ்த்துஞ் சேய்வரல் வருத்தம் விட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானுங் கண்படை கண்ணிய கண்படை நிலையுங் கபிலை கண்ணிய வேள்வி நிலையும் வேலை நோக்கிய விளக்கு நிலையும் வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறுஉவும்" ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்துங் கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கு முளவென மொழிப. 34 பா.வே. 1. வேலினோக்கிய - நச்சர். சோம. பால. பாடம். இது வேலின் ஒக்கிய, வேலின் நோக்கிய என இருவகையாகவும் கொள்ளப்பட்டுள்ளது. 2. செவியறிவுறுாஉ - பதிப்புகள். 7, 23 எண்ணும்மை வேண்டும். 3. னான்கு - சுவடி 74 எழுத்துப்பிழை நா>னா i 1040-93 தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூத ரேத்திய துயிலெடை நிலையுங் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறிஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமுஞ் சிறந்த நாளினிற் செற்ற நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங் கலமுஞ் + 'இனி வேலை நோக்கிய விளக்கு நிலை (து 91) என்று இங்கு வரும் பாடங்கொண்டு உரை கூறிச் சென்றனர். இளம்பூரணர் வேலினோக்கிய என்றும் பாடம் உண்டு என்று குறித்துள்ளார். அப்பாடமே நூல்நெறிக்குப் பொருந்துவது கண்டு அப்பாடத்தை ஏற்றேன். வேலினோக்கிய என்ற பாடம் எழுதுவோரின் சோர்வால் வேலை நோக்கிய என்று எழுதப்பட உரையாசிரியன்மார் னோக்கிய என்பது பிழை என உணர்ந்து நோக்கிய எனப் பாடங்கொண்டனராவார்." பால. (த.நூ.பா.வே. பக். 78)