பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 105.1-104 மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்டல்' இடம்பெற்றுத் தழாஅ லிடையூறு கிளத்தல் நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்ற முளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பி னிரு நான்கு கிளவியும் பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும் நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைப்பினுங் குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பி னிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியுந் தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறுலுந் தண்டா திரப்பினு மற்றைய வழியுஞ் சொல்லவட் சார்த்தலிற்’ புல்லிய வகையினும் அறிந்தோ ளயர்ப்பி னவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலுந் தோழி நீக்கலி னாகிய நிலைமையு நோக்கி மடன்மா ഐ് மிடனுமா ருண்டே பா.வே. 1. பொய்ப்பாராட்டல் - சுவடி 1054. பகரவொற்று மிகை. 2. முட்படத் - சுவடி 103 வெள்ளைப்பாடம். 2:23 II 3. பெயர்ந்தவழிக் - சுவடி 103. சுவடி எழுத்தாளரின் சொந்தப் பாடம் போலும். ஒரளவு பொருந்துகிறதெனினும் மூலபாடமன்று. 4. குறிப்பு - சுவடி 103 எழுத்துப்பிழை. பி>பு 5. சார்தலிற் - பதிப்பு 83இல் அச்சுப்பிழை. உரைப்பகுதியில் சார்த்தலில் எனச் சரியாக உள்ளது. 5. மடன்மாக் கூறு - சுவடி 115.