பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் E33 அவள்விலங்' குறினுங் களம்பெறக் காட்டினும் பிறன்வரை வாயினு மவன்வரைவு மறுப்பினும் முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் வரைவுடன் பட்டோர்க்' கடாவல் வேண்டினும் ஆங்கதன் றன்மையின் வன்புறை" யுளப்படப் H H - - 17 பாங்குற வந்த நாலெட்டு வகையினுந் தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன. 24 பா.வே. 1. மவனறி - சுவடி 9, 53, 50.2 எழுத்துப்பிழை, ள>ன 2. பின்வர - நச்சர். பாடம். 3. மறந்தவ - சுவடி 115. எழுத்துப்பிழை. றை>ற 4. முதன் மூன்றளைஇப்’ - நச்சர். பாடம். முன்ன மூன்றளைஇப் - பால. பாடம். 5. பலவேறு - பதிப்புகள் 2, 7, 14, 22 சுவடி படிப்பதில் மாற்றம். 6. விடத்தும் - நச்சர் பாடம் 7. கிளவி - சுவடி 115. எழுத்துப்பிழை. பகரமெய் விடுபட்டது. 8. கடஇ - சுவடி 115. எழுத்துப்பிழை. டை>ட 9. வன்பொறைக் - சுவடி 9, 53, 115 பதிப்பு 2 பதிப்பு 24 இல் சு.வே. 10. கையறவு - சுவடி 73. எழுத்துப்பிழை. வுகரம் மிகை டி இளம்பூரணர் முன்னமுன் றளைஇப் எனப் பாடங்கொண்டார். அவர் காலத்திலேயே இத்தொடருக்கு வேறு பாடமும் வழங்கி வந்ததால், "முதன்மூன் றளைஇ என்று பாடமாயின் மனத்தினானும் மொழியினானும் உடம்பினானும் ஒருங்கே அளவி என்றுமாம்" என விசேட உரை வரைந்தார். இளம்பூரணரின் இந்த இரண்டாவது பாடத்தை ஏற்ற நச்சர் அவருரையை ஏற்காமல், "இயற்கைப் புணர்ச்சி முதலிய மூன்றனையும் தான் அறிந்தமை குறிப்பான் உணர்த்தி " என உரை வரைகிறார். பால. இளம்பூரணரின் முற்பகுதியையும் நச்சரின் பிற்பகுதியையும் இணைத்து. முன்னம் மூன்றளைஇ எனப் பாடங்கொண்டு நச்சரைத் தழுவி உரை கூறுகிறார். ப.வெ.நா.