பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பொருளதிகாரம் 1101-154 புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும் இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும் மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணுங் காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற் றாய்போற் கழறித் தழிஇய மனைவியைக்' காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும் இன்னகைப் புதல்வனைத் தழிஇ யிழையணிந்து பின்னை வந்த வாயிற் கண்ணும் மனையோ ளொத்தலிற் றன்னோ ரன்னோர் எனினும் நச்சர். தான் கொண்ட மூல ஏட்டில் உணர்ப்பு என்பது புணர்ப்பு எனத் தோன்றியமையால்தான் புணர்ப்புவயின் வாரா ஊடல் எனப் பாடங் கொண்டுள்ளார். தான் கொண்ட மூல ஏட்டுப் பாடமே தவறுடையது என உணர்ந்த நச்சர். உணர்ப்பு எனக்கொண்டே பொருள் வரைந்துள்ளார். . மேலும் தன் மூல ஏட்டில் கண்ட இப்பிழையைச் சுட்டும் வகையில் உணர்ப்புப் புனர்ப்புப் போல நின்றது என -ஐ விளக்கமும் வரைந்துள்ளார். மூல ஏட்டின் 'பாடத்தைப் போற்றும் பண்பும். அதே சமயம் பொருளுணர்ச்சியும். மரபு நிலையும் பிறழாமல் உரை கூறும் போக்கையும் இங்குக் காண்கிறோம். உணராப் புலவியின் என இங்கு வரும் பதிப்புப் பாடம் சிறப்பில்லாதது. வெ.ப. (பக். 208) புணர்ப்புவயின் என்ற பாடம் நச்சினார்க்கினியப் பதிப்பு எதிலுமே காணப்படவில்லை. இதுவரை எந்தச் சுவடியிலும் இப்படி இல்லை. மூலபாடம் ஏட்டில் தவறாக இருந்தால் அதனைத் தவறு எனத் தெளிவாகக் கூறுவதே பண்டைய உரையாசிரியர் மரபு. அது பாடமன்று. அது பாடமன்மை அறிக என்பது அவர்தம் வாய்பாடு. இங்கு நச்சர். உணர்ப்பு என்ற சொல்லுக்கு - அது மிக மிக அருகிய வழக்காதலின் - சொல்லிலக்கணம் கூறுகிறாரேயன்றிப் பாடபேதக் குறிப்பன்று. இச்சொல்லிலக்கணத்தை வெள்ளைவாரணனார் எளிமைப்படுத்திக் கொடுத்துள்ளார். ப.வெ.நா. "புணர்த்தல் என்னும் பொருளுடைய புனர்ப்பு என்னுந் தொழிற்பெயர் புனர்க்கப்படுந்தன்மை என்ற பொருளைத் தந்தாற் போன்று உணர்த்தல் என்னும் பொருளுடைய உணர்ப்பு என்னுந் தொழிற்பெயர் உணர்த்தப்படுந்தன்மை எனப்பொருள் தந்து நின்றது." வெள்ளை. (பதிப்பு 3ே பக். 120 அடிக்) காத்ததன்வயிற் எனப்பாடங்கொண்ட இளம்பூரணர் இதற்கு அவனைப்புறங்காத்த தன்னிடத்துற்ற எனப்பொருள் கூறுகிறார். (பதிப்பு 24 பக். 857. பதிப்பு 63 பக். 110) ஆனால் எல்லாப்பதிப்புகளிலும் மூலம் காத்த தன்மையிற். எனவே உள்ளது. இப்பிழை பதிப்பாசிரியர் தம் சோர்வான் நிகழ்ந்ததாகும். இனிவரும் பதிப்புகளில் இக்குறை களையப்படவேண்டும். ப.வெ.நா.