பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் 257 1180-213 வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தன் மரீஇய மருங்கி னுரித்தென மொழிப. IE 1161-214 தேரும் யானையுங் குதிரையும் பிறவும் ஊர்ந்தன ரியங்கலு முரிய ரென்ப.' 17 பா.வே. 1. வென்ப - சுவடி 7, 9, 53, 73, 502, பதிப்பு 2. பிழை. ஊர்ந்தனர் என்னும் உயர்தினைச் சொல்லுக்கு உரியர் என்பதே பொருந்தும். 1162-215 உண்டற் குரிய வல்லாப் பொருளை(ய்) உண்டன போலக் கூறலு மரபே. 18 1153-216 பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே காப்புக்கைம் மிகுத லுண்மை யான. 19 டி 'இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர் (பதிப்பு 74 பக். 463 அடிக்) என்னும் சுந்தரமூர்த்தியின் குறிப்பு ஏற்புடையதன்று. இதுபற்றி வெள்ளைவாரணனார் கூறுதல் தெளிவான செய்தியாகும். அது வருமாறு: "பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே காப்புக்கைம்மிகுதல் உண்மையான " என்ற அளவிலேயே இவ்வியலின் 19ஆம் சூத்திரம் நிறைவுறுகின்றது. " பொருள்வயிற் பிரிதல் வேண்டும் எனக் கூறுதலும் கடியப்படாது. தலைமகளைத் தமர் காக்குங் காவல் மிகுதியுள்ள வழி" என்ற அளவில் இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் எழுதிய உரையும் நிறைவு பெற்றுள்ளமை காணலாம். இச்சூத்திரத்தினையொட்டிப் பகர அடைப்பில், 'அன்பே யறனே. காப்பி னுள்ளே எனவரும் பகுதி (அதாவது வ.உ.சி. பதிப்பில் இவ்வியலின் 20ஆம் நூற்பா ஆகும். இதனாற் சொல்லியது. ஒருவழித் தணத்தற்கண் நிகழ்வன எனவரும் உரைப்பகுதி பின்வரும் 20ஆம் சூத்திரத்திற்குரியதாகும் என்பது இளம்பூரணர் உரையினையும் நச்சர். உரையினையும் ஒப்பிட்டு நோக்குங்கால் இனிது புலனாகும். அன்பே யறனே.... காப்பி னுள்ளே இளம்பூரணருரையாகக் கிடைத்துள்ள ஏட்டுப் படியில் இச்சூத்திரமும் இதன் கருத்துரையும் ஏடெழுதுவோரால் எழுதாமல் விடப்பட்டனவாயினும் இதன் உரையில் எஞ்சிய பகுதி இடம் பெற்றிருத்தலால் இதனை நச்சர். உரையில் உள்ளவாறே தனிச்சூத்திரமாகக் கொண்டு இப்பகுதியில் வெளியிடுதல் இன்றியமையாததாயிற்று. (அதாவது பொருளதிகார இளம்பூரணப் பதிப்பாசிரியர்களுக்கு" (பதிப்பு 64 பக். 35, 66 அடிக்.)