பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் 1184-237 தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் மெய்ம்மை யாக வவர்வயி னுணர்த்துந்' தலைத்தாட் கழறற மெதிர்ப்பொழு’ தின்றே மலிதலு மூடலு மவையலங் கடையே. பதிப்பு 2இல் இந்நூற்பாவின் நான்காமடி தனி கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு பிரிக்காமையே சிறப்பு. பா.வே. 1. னுணர்ந்து - நச்சர். பாடம். 2. எதிர்பொழு - சுவடி 73. பதிப்பு 83 1185-238 பொழுது தலைவைத்த கையறு காலை(ய்) இறந்த போலக் கிளக்குங் கிளவி மடனே வருத்த மருட்கை மிகுதியொ(டு) அவைநாற் பொருட்க ணரிகழு மென்ப. 1186-239 இரந்துகுறை யுற்ற கிழவனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும் வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும் நல்வகை யுடைய நயத்திற் கூறியும் பல்வகை யானும் படைக்கவும் பெறுமே. பா.வே. 1. வாய்மையுங் - சுவடி 115. பிழை, உம்மை மிகை. 1187-240 உயர்மொழிக் கிளவி யுறழுங் கிளவி(ய்) ஐயக் கிளவி யாடுஉவிற் குரித்தே. பா.வே. 1. குரிய - நச்சர். பாடம். 1188-241 உறுக ணோம்ப றன்னியல் பாகலின் உரிய தாகுந் தோழிகண் ணுரனே. 273 40 நூற்பாவாகக் 41 42 43 44