பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் 287 1237-290 அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவனும். Io பதிப்பு 2இல் இந்நூற்பாவிற்குமுன் அவற்றுள் என்னும் சொற்சீரடி உள்ளது. மேலும் மூன்றாஞ்சீர் உம்மையின்றி. பிறவொடு எனக் காணப்படுகிறது. இவற்றிற்குச் சுவடிச் சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. 1238-291 எள்ள விழையப் புல்லப் பொருவக் கள்ள மதிப்ப வெல்ல வீழ(வ்) என்றாங் கெட்டே பயனிலை யுவமம். 14 1239-292 கடுப்ப வேய்ப்ப மருளப் புரைய(வ்) ஒட்ட வொடுங்க வோட்ட நிகர்ப்பவென்று அப்பா லெட்டே மெய்ப்பா லுவமம். 15 பா.வே. 1. வோட - பேரா. பால. பாடம். 240-293 போல மறுப்ப வொப்பக் காய்ப்ப" நேர வியப்ப நளிய நந்தவென்(று) ஒத்துவரு கிளவி யுருவி னுவமம். 15 ப.வே. 1. காய்த்த - சுவடி 73, 115 பதிப்புகள் 24, 38, 71, 74, 83 ஆகியவற்றிலும் காய்த்த என்றே உள்ளது. பதிப்பு 2இல் மட்டுமே காய்ப்ப என்னும் பாடம் காணப்படுகிறது. இவ்வியல் 11ஆம் நூற்பாவிலும் காய்ப்ப என்னும் பாடமே கொள்ளப்பட்டது. அங்கே உரைத்த காரணம் இங்கும் பொருந்தும். 1241-294 தத்த மரபிற் றோன்றுமன் பொருளே. 17 1242-295 நாலிரண் டாகும் பாலுமா ருண்டே IB 1243-296 பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன் வழிமருங் கறியத் தோன்று மென்ப. I9