பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் 1244-297 உவமப் பொருளி னுற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்திய லான. 20 1245-298 உவமப் பொருளை யுணருங் காலை மருவிய மரபின் வழக்கொடு வருமே." 21 பா.வே. 1. மரீஇய மரபின் வழக்கொடு படுமே - பேரா. பாடம். 1246-299 இரட்டைக் கிளவி யிரட்டை வழித்தே. 22 பா.வே. + 1. கிளவியும் - பேரா. பாடம். + பொதுவாகப் பேராசிரியப் பதிப்புகளில் மூலபாடம் இரட்டைக்கிளவி என்றே காணப்படுகிறது. (பதிப்புகள் 33, 74) பதிப்புகள் 33, 74 இன் பேரா. உரைப்பகுதியில், "இரட்டைக்கிளவி - அடையும் அடையடுத்த பொருளுமென இரண்டாகச் சொல்லப்படுங் கிளவி' என்றே காணப்படுகிறது. பதிப்பு 71 பேரா உரைப்பகுதியில், "இரட்டைக்கிளவியும் - அடையும் அடையடுத்த பொருளுமென இரண்டாகச் சொல்லப்படுங் கிளவி' என உள்ளது. (அதாவது மூலத்தைக் கொள்ளும் போது உம்மை சேர்ந்தும் உரையில் உம்மைக்குப் பொருளின்றியும்) ஆனால் பதிப்புகள் எல்லாவற்றிலும் "உம்மையான் ஒற்றைக்கிளவியும் இரட்டை வழித்தாகி வருவன கொள்க' என்னும் உரைப்பகுதி இடம் பெற்றுள்ளது. வெள்ளை "உம்மை என்றது இரட்டைக் கிளவியும் என்புழி வரும் உம்மையினை" என விளக்குகிறார். (பதிப்பு 71 பக். 79) இதனால் பேரா. கொண்ட பாடம் இரட்டைக்கிளவியும் என்பது என விளங்குகிறது. கந்தர. இரட்டைக்கிளவியும் என்பது இளம்பூரணர் பாடம் எனக் கொடுத்துள்ள அடிக்குறிப்பு பொருத்தமற்றதாகும். (பதிப்பு 74 பக். 155) பேரா. கொண்ட பாடத்தைத் தெளிவாகக் கண்ட பால. "பேரா. மயக்கவுரை வரைந்தமையொடு இரட்டைக்கிளவியும் HTTo7 உம்மையைக் கூட்டிப் பாடங்கொண்டார்" என்கிறார் (பதிப்பு 83 பக். 373) இளம்பூரணரின் உரை, "இரட்டைக்கிளவியாவது உவமை யிரண்டு சொல்லோடு அடுத்துவருவதனோடு உவமிக்கப் படும் பொருளும் இரண்டு பொருளாகி வருதல் வேண்டும்" என்பதாம். இதில் உம்மை வரவில்லை. இந்நூற்பாவின் சிறப்புரையிலும் உம்மை பற்றிய பேச்சு இல்லை. இதனால் இளம்பூரணரின் பாடம் இரட்டைக்கிளவி என்பதுதான் என் அறிய இயலுகிறது. ப.வெ.நா.