பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 29.3 1264-317 அவற்றுள் மாத்திரை யளவு' மெழுத்தியல் வகையும் மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர். 2 பா.வே. 1. வகையு’ - இளம்பூரணர் பாடம். 2. தனவே - இளம்பூரணர் பாடம். 1265-318 குறிலே நெடிலே குறிலினை குறினெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரு நிரையு மென்றின் னோரே' 3. பா.வே. 1. மென்று சிற் - சுவடி 16, 481 எழுத்துப்பிழை 5p. 2. மென்றி சிற் பெயரே - அனைத்துப் பதிப்புகளும். "மாத்திரை எழுத்தியல் எனத் தொடங்கும் நூற்பாவில் (பொ. 310) பொருள்வகை என இளம்பூரணர் கொண்ட பாடத்தின்படி செய்யுளியல் நூற்பாவில் பொருள்வகை இலக்கணம் கூறப்படவில்லை. பேரா. நச்சர் கொண்ட பாடம் கூற்றுவகை என்பது கூற்றுவகைகளைப் பற்றியே செய்யுளியலில் நிறுத்த முறையானே உணர்த்தப்பட்டுள்ளது. எனவே கூற்றுவகை என்பதே சிறந்த பாடம்" வெப. (பக் 3.18) "(ஆறு தலையிட்ட வைந்நா லைந்தும் என்னும்) வ.உ.சி. பாடம் பொருள் தருமாறில்லை. அதனால் வை என்பதை னவ என்று கருதி, ஆறுதலை யிட்டன வந்நா லைந்தும் என்று பாடங் கொள்க." அடிகள் (பதிப்பு 70 பக். 1 அடிக் மேலும் காண்க பக். 28) டி "மாத்திரை வகையும் (பொ. 311) என்ற இளம்பூரணர் பாடத்துக்குப் பிறர் மாத்திரை அளவும் எனக் கொண்டுள்ளனர். மாத்திரை என்பதோடு அளவு என்னும் சொல் தொடர்புடையது. மேலும் மாத்திரைகளின் வகைபாடுகளை எழுத்ததிகாரம் பேசவில்லை. மாறாக, எழுத்ததிகாரத்தில் ... மாத்திரைகளின் அளவே கட்டியுரைக்கப்பட்டுள்ளது. எனவே பேரா. நச்சர். கொண்ட மாத்திரை அளவும் என்பது சிறப்புடைய பாடம்" வெ.ப. (பக் 213)

  • "இந் நூற்பாவின் ஈற்றிலுள்ள என்றிசின் என்னும் சொல் நுவன்றிசின் என்றாற்போலத்

தன்மை ஒருமை வினை முற்று ஆகும். என்றேன் என்று பொருள்படும். தொல்காப்பியர் என்ப. என்மனார். மொழிப, மொழிமனார் என்னும் படர்க்கைச் சொற்களைத் தந்து. புலவர் கூற்றாகவே இலக்கண விதிகளைக் கூறிச் செல்பவராதலாலும். இதன் பின்னர் நேர்பு. நிரைபு அசைகளைக் கூறும் நூற்பாவும், ! ருெவகை உகரமொ டியைக்கவை வரினே நேர்பும் நிரைபும் ஆகும் என்ப' எனப்புலவர்