பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 பொருளதிகாரம் 1296-349 அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே. 34 1297-350 நாலெழுத் தாதி யாக வாறெழுத்(து) ஏறிய நிலத்தே குறளடி யென்ப. 35 பா.வே. 1. நிலைத்தே - சுவடி 16. தொன்னூல் பாடம். 1298-351 ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே(ய்) ஈரெழுத் தேற்ற மல்வழி யான". 96. பா.வே. 1. ஈரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப - சுவடி 4.81. நினைவுப்பாடம் ஆகலாம். 1299-352 பத்தெழுத் தென்ப நேரடிக் களவே(ய்) ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே. 37 பாவ்ே. 1. தொற்றலங் - சுவடி 73, 115 பதிப்பு 44, 69 பதிப்பு 81இல் சு.வே. + "ஈரெழுத் தேற்ற மல்வழியான எனவே பாடங்கொண்டனர் பண்டையுரையாசிரியர்கள். லகரமும் வகரமும் ஏடெழுதுவோரால் வேறுபாடின்றி யெழுதப்பெறுதலும் உண்டாதலின் அவ்வழியான எனப்பாடங்கொண்டு. சிந்தடிக்குச் சிற்றெல்லையாகிய அளவு ஏழெழுத்தென்று கூறுவர். அவ்விடத்து இரண்டெழுத்து மிக்கு வருதல் அதன் பேரெல்லையாகும் எனப் பொருள் கூறுதற்கும் இடமுண்டு." வெள்ளை (பதிப்பு 81 பக், 186-167)

  • சுந்தரமூர்த்தியின் பேராசிரியப் பதிப்பிலும் (89) கழகத்தின் நச்சினார்க்கினியப் பதிப்பிலும் (44) ஒற்றலங்கடையே என மூல பாடம் உள்ளது. பேராசிரியரின் உரைப்பகுதியிலோ விசேட உரையிலோ மெய்யெழுத்துக்களைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. நச்சர். தெளிவாக "நான்கெழுத்தானாய நான்கு நிலனும் ஏற்றமாய் வராதவழி" என்கிறார். இதனால் அவர் கொண்ட பாடம் ஏற்றலங்கடையே என்பது சற்றும் ஐயமில்லாமல் புலனாகிறது. ஒற்றலங்கடையே என்பது யாப்பருங்கல விருத்தி யுடையாரும். தொன்னூலாரும் கொண்ட பாடமேயன்றித் தொல்காப்பியப் பாடவேறுபாடாகாது. இந்நிலையில் ஒற்றலங்கடையே என்பது நச்சரின் பாடம் என அடிகளும். (பதிப்பு 70 பக். 52 அடிக்) பேராசிரியரின் பாடம் என வெள்ளையும் (பதிப்பு 81 பக். 181 அடிக்) குறிப்பிடுவது ஆய்விற்குரியது. ப.வெ.நா.