பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.25 பொருளதிகாரம் A. க | முதலு முடிவு மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றகன்ற வுரையொடு புணர்ந்து' நுண்ணிதின் விளக்க லதுவதன்' பண்பே. 15.3 பா.வே. 1. இச் சொற்சீரடி சுவடி 115 இல் காணப்படவில்லை. 2. நுவலுங் காலை என்னும் தொடர் நச்சர். பாடத்தில் இல்லை. இதனையடுத்து, 'நுதலிய பொருளை முதலிற் கூறி ' என ஒர் அடி அரசஞ் சண்முகனாரின் தொல்காப்பியப் பாயிர விருத்தியில் (பதி.10 பக்.108) அதிகமாகக் காணப்படுகிறது. இவ்வடி பிற பதிப்புகளிலோ சுவடிகளிலோ காணப்பெறவில்லை. அரசஞ் சண்முகனாருக்கு இவ்வடி எங்கிருந்து கிடைத்ததெனத் தெரியவில்லை. 3. முதனடு விறுதி-பதிப்பு 70 இல் சு.வே. 4. பொருந்தி-பேரா. நச்சர் பாடம், 5. நுவலுதல்-சுவடி 476. பொருந்தாப் பாடம். 1426-479 அதுவே தானு மொருநால்' வகைத்தே. 164 பா.வே. 1. மீரிரு-பேரா. நச்சர். பாடம். 1427-480 ஒருபொரு ணுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த” படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென்(று) ஆங்கனை மரபி னியலு மென்ப. I55 பா.வே. 1. கிளர்ந்த-சுவடி 476 பிழை. ரகரமெய் மிகை. 2. தொடரிய-பதிப்பு 70 இல் சு.வே. 3. ஆங்கென-சுவடி 115 எழுத்துப்பிழை னை ன ஆங்கனய-சுவடி 575 பொருந்தாப்பாடம் டி அரசஞ் சண்முகனார் தம் பாயிர விருத்தியில் இதனையும் அடுத்த நூற்பாவையும் (163,154) இணைத்து ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளார். (பக்.110) இதற்குச் சுவடிச் சான்றிருப்பதாகத் தெரியவில்லை. ப.வெ.நா.