பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 பொருளதிகாரம் 1596-649 வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான, 94 1597-650 மரபுநிலை திரியா மாட்சிய வாகி(ய்) உரைபடு நூறா மிருவகை யியல' முதலும் வழியுமென நுதலிய நெறியின." 95 பா.வே. 1. நிலைய-இளம்பூரணர் பாடம், 2. நெறியின்-பேரா. பாடம். o 1598-651 வினையி னிங்கிய விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனு லாகும். 95 பா.வே. 書 1. னிங்கி -இளம்பூரணர், பேரா. பாடம். டி இந் நூற்பா உரையில் பேரா. "இக் கருத்தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஒத்தென்ப" (பதிப்பு.74 பக்.559) என ஒரு வாக்கியத்தை எழுதுகிறார். இதனால் சிலர் மரபியலை எட்டாம் இயலாகவும் செய்யுளியலை ஒன்பதாம் இயலாகவும் கொண்டிருந்தனர் எனப் புலனாகிறது. ஆனால் அவ்வாறு கொண்டவர் யாவர் என விளங்கவில்லை.

  • வினையின் நீங்கிய என்னும் பாடம் வ.உ.சி. பதிப்பில் (24). சு.வே.ஆக உள்ளது. பதிப்புகளில் நீங்கி என்ற மூலபாடமே காணப்படுகிறது. பால, "நீங்கிய என்னும் பாடம் வ.உ.சி. பதிப்பில் உள்ளது. அதுவே செம்மையான பாடமாதலின் கொள்ளப்பட்டது" என்கிறார்.(பதிப்பு 89 பக்.228) இறை எனத் தனியாக ஒன்று இல்லை; நல்வினை தீவினைகளை நீத்துவிட்ட ஒர் உயிர் முற்றறிவு பெற்று முனைவனாகிறது என்னும் சமணக் கோட்பாட்டிற்கேற்ற பாடம் நீங்கி என்பது. இங்கு நீங்கி என்னும் வினையெச்சம் காரணப்பொருட்டு வினையின் நீங்கி-அதன் காரணமாக-விளங்கிய அறிவினைப் பெற்ற முனைவன் எனப் பொருள் கொள்ள வேண்டும். இந்து சமயத்தின்படிக் கடவுள் என ஒன்று உண்டு. அது இயல்பாகவே வினைகளின் தொடர்பற்றது. இயல்பாகவே முற்றறிவு பெற்றது. அது தலைமையானது. இப் பொருள் பெற நீங்கிய எனப் பாடங்கொள்ள வேண்டும். வினையின் நீங்கிய முனைவன், விளங்கிய அறிவின் முனைவன் என இரண்டு பண்புகளைக் கொள்ள வேண்டும். சமணக் கருத்து-வினைகள் இருந்து. பிறகு ஒழிந்து அதனால் முற்றறிவு பெற்ற உயி முனைவன் என்பது. இந்து சமயக் கருத்து-இயல்பாகவே வினைகளின் தொடர்பே இல்லாதவனும் இயல்பாகவே முற்றறிவு பெற்றவனும் ஆகியவன் இறைவன் என்பது.

அவரவர் கொள்கைக் கேற்ப இரு பாடங்களும் சிறப்பானவையே. ப.வெ.நா.