பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.5 5 73 74 75 IO.3 106 106A 115 மூலம். 17X1.25 அங்குலம் 150 பக். பக்கத்திற்கு 8 வரி; நல்லநிலை; சிறிது சிதைவு, தொடர்ந்து ஒரே வரிசையாக இன்றி நூற்பாக்கள் தெளிவாக நூற்பா வடிவிலேயே எழுதப்பெற்றுள்ளன. எனினும் பிழைகள் மிகுதி. பொருள். அகம். புறம். நச்சர் உரை. 17x1.5 அங்குலம்; 248 பக். பக்கத்திற்கு 9 வரி. நல்லநிலை. பழமையானது. அகத்திணை 2ஆம் நூற்பாவும் புற்த்திணை யிறுதியில் சில வரிகளும் இல்லை. மயிலை. அண்ணாசாமி புத்தகம் என்ற குறிப்பு உள்ளது. பொருள். களவு. நச்சர் உரை. 17x1.5 அங்குலம்; 150பக். பக்கத்திற்கு 9 வரி, நல்லநிலை; பழமை, கற்பியல் தொடக்கமும் இச்சுவடியில் உள்ளது. பொருள். இளம்பூரணம். களவு முதல் மெய்ப்பாட்டியல் 12ஆம் நூற்பா முடிய உள்ளது. 17x1.25 அங்குலம், 216 பக். பக்கத்திற்கு 9 வரி, நல்லநிலை, பழமையானது. பொருள். இளம்பூரணம். 17.5x1.75 அங்குலம்; 122பக். பக்கத்திற்கு 16 வரி, பழமை. இதில் அகத்திணையியல் முதல் கற்பியல் 23ஆம் நூற்பா வரையுள்ளது. பொருள். இளம்பூரணம். 17.75x1.75 அங்குலம், 64பக். பக்கத்திற்கு 11 வரி, நல்லநிலை; பழமை; இதில் அகம். தொடக்கம் முதல் புறம். 16ஆம் நூற்பா வரையிலும், அடுத்துக் களவியல் முதல் நூற்பாவும் உள்ளது. மூலம். 17x1.25 அங்குலம், 216பக். பக்கத்திற்கு 7வரி, பழமை. ஆண்டு 8.77. (இது கொல்லம், கி.பி. 1702) ஆதிநாதன் தொல்காப்பியம் முற்றும் என்பது ஈற்றுக்குறிப்பு. படித்தவரால் படித்துத் தேவையான இடங்களில் திருத்தப்பெற்ற சுவடி.