பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி மரபு 11 48. யரழ வென்னு மூன்றுமு னொற்றக் கசதப ங்ஞநம விரொற் றாகும். 15 பா.வே. + 1. மூன்று மொற்ற' - பதிப்புகள் 13, 38, 47, 53 இல் சு.வே. 49. அவற்றுள் ரகர ழகாரங் குற்றொற் றாகா. 16 50. குறுமையு நெடுமையு மளவிற். கோடலிற் றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல'. 17 LIIT, வே. 1. மளபிற் - சுவடி 1052 எழுத்துப் பிழை வி> பி 2. இயல்பே - பதிப்புகள் 47, 53 இல் சு.வே. 51. செய்யு ளிறுதிப் போலு மொழிவயின் னகர மகார மீரொற் றாகும். 18 பதிப்பு 87இல் அடுத்த நூற்பாவையும் இத்துடன் இனைத்து ஒரே சூத்திரமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்குச் சுவடிச் சான்றில்லை. பா.வே. . ചേi് - பதிப்புகள் 1, 25, 51, 53 + "யரழ என்னும் மூன்று முன்னொற்ற என இளம்பூரணரும். யரழ என்னும் மூன்றும் ஒற்ற என நச்சினார்க்கினியரும் பாடங்கொண்டுள்ளனர். இளம்பூரணர் பாடம் ய், ர், ழ் என்ற ஒற்றுக்கள் குறிற்கீழும், நெடிற்கீழும் முதலில் ஒற்றாய் நிற்கும் என்று மூன்று ஒற்றுக்களும் நிற்கும் இடத்தை உணர்த்தித் தெளிவுடன் உள்ளது. நச்சினார்க்கினியர் கொண்ட் பாடத்தில் ஒற்றுக்கள் நிற்கும் இடம் தெளிவுபடுத்தப் பெறவில்லை. எனவே பொருட்டெளிவுடைமை நோக்கி இளம்பூரணர் பாடத்தை இங்குச் சிறந்தது எனக் கொள்ளலாம்.' வெ.ப, பக் 172 - 173 "மாத்திரை என்று பொருள்பயிலும் இடங்களிலெல்லாம் அளபு என்ற பாடத்தையும். அளத்தல் தொழிலையுடைய பெயர்ச்சொற்களைச் சுட்டிவருங்கால் அளவு என்ற பாடத்தையும் உரையாசிரியர்கள் கொண்டிருத்தல் வேண்டுமெனப் புலனாவதால் இச் சொற்கள் பயிலும் இடங்களிலெல்லாம் பொருளுணர்ச்சியோடு தக்கவாறு அவற்றைத் திருத்தியமைத்தல் வேண்டும். வெ.ப, பக் 166 - 167 பல பதிப்புகளிலும், மாறன் அலங்கார மேற்கோளிலும் (பொருளணி. 98) போலி, என்பதே பாடம். எனினும் போலும் என்பதே ஏற்புடைய பாடம். o