பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணரியல் 33 I 13. வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் வேற்றுமை யல்வழிப் புணர்மொழி' நிலையும் எழுத்தே சாரியை யாயிரு பண்பின் ஒழுக்கல் வலிய புணருங் காலை, 10 பா.வே. 1. வேற்றுமைக் - சுவடி 1044 3. பொருள்மொழி' - பதிப்பு 77இல் திருத்திக் கொள்ளப்பட்டது. இத் திருத்தத்திற்கு எந்தச் சுவடியிலும் ஆதாரம் இல்லை. 114. ஐஒடு குஇன் அதுகண் ணென்னும் அவ்வாறென்ப"வேற்றுமை புருபே. 11 பா.வே. 1. என்ப சுவடி 73. பிழை 115. வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற் (கு) ஒல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும். 12 1 1 5. ஆற னுருபி னகரக் கிளவிய்" ஈறா ககரமுனைக் கெடுதல் வேண்டும். 13 பா.வே. 1. கிளவியும் - சுவடி 1053 பிழை உம்மை தேவையற்றது 2. கெடுத்தல் - சுவடி 1051. பிழை இது விதி நூற்பா + "இச் தத்திரத்து முதலிரண்டடியிலும் உள்ள பொருள்மொழி நிலையும் என்னும் பாடம் எவ்வகையாலோ பிறழ்ந்து புணர்மொழி நிலையும் எனவுளது. அதனைப் பிழையெனக் கருதாமல் உரையாசிரியன்மார் குழம்பித் தடுமாறி இயைபற்ற விளக்கங்களை இயம்பிச் சென்றனர். = ஆசிரியர் அமைத்த பாடம் பொருள்மொழி நிலை என்பதேயாம். இதனை "ணகார இறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே" (புள்ளி, 7) "யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே" (புள்ளி, 62). "லனஎன வரூஉம் புள்ளி யிறுதிமுன் . வேறறுமை குறித்த பொருளவயினான” (குற்றிய75), "அச்சக் கிளவிக் கைந்தும் இரண்டும் எச்ச மிலவே பொருள்வயி னான" (வேற். மயங், 17) எனப் பின்னர் எடுத்தாளுதலான் அறிக."பால பதிப்பு 77.