பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 எழுத்ததிகாரம் 7. உயிர்மயங்கியல் 204 அகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் தத்த மொத்த வொற்றிடை மிகுமே. I 205 வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியும் எனவெ னெச்சமுஞ் சுட்டி னிறுதியும் ஆங்க வென்னு முரையசைக் கிளவியும் ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. 2 206 சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின் ஒட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும். 3. 207 யவமுன் வரினே வகர மொற்றும். 4. 208 உயிர்முன் வரினு மாயிய றிரியாது. 5 209 நீட வருதல் செய்யுளு ளுரித்தே. 5 210 சாவ வென்னுஞ் செயவென் னெச்சத்' திறுதி வகரங் கெடுதலு முரித்தே. 7 பா. வே. 1. செயவெனெச்சத் - பதிப்புகள் 1, 5 பதிப்புகள் 47, 58 இல் சு.வே. 211 அன்ன வென்னு முவமக் கிளவியும் அண்மை ஈட்டிய விளிநிலைக் கிளவியுஞ் செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும் ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியுஞ் செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியுஞ் செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியும் அம்ம வென்னு முரைப்பொருட் கிளவியும் † பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட(வ்) அன்றி யனைத்து மியல்பென மொழிப. 8 பா.வே i 1. செய்மன - சுவடி .73 பதிப்பு 85 பிழை. மகரமெய் விடுபட்டது.