பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்மயங்கியல் 55 2. னோவும் - சுவடி 1052 பிழை, பொருள் வேறுபாடு 3. மிகா - எல்லாச் சுவடிகளும் பல பதிப்புகளும் இப்பாடத்தையே கொண்டுள்ளன. இலக்கண விளக்கத்தும் பதிப்பு 77இலும் மட்டுமே அளபெடுத்த வடிவம் காணப்படுகிறது. ஈற்றுச்சீர் தனி நிரையசையாக நிற்பதைத் தவிர்க்க இங்கு அளபெடை பெற்ற வடிவமே பாடமாகக் கொள்ளப்படுகிறது. 275 ஏகார விறுதி யூகார வியற்றே. 7.2 275 மாறுகொ ளெச்சமும்' வினாவு மெண்ணுங் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். 73 பா.வே. 1. மாறுகோளெச்சமும் - பதிப்பு 1, 58 சுவடியில் எழுத்துவடிவம் ஒற்றைக் கொம்பே. சிலர் இரட்டைக்கொம்பாகவும், பலர் ஒற்றைக்கொம்பாகவும் படித்துள்ளனர். 277 வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. 74 278 ஏவென் னிறுதிக் கெகரம் வருமே. 75 பா.வே. 1. ஏயென் - சுவடி 999 பதிப்புகள் 1, 5. 58. இங்கு ஏ பெயர்ச்சொல் இதன்முன் வகர வுடம்படுமெய் வருவதே பெரும்பான்மை. ஏ என்னும் இடைச்சொல்முன்தான் யகர வுடம்படுமெய் வரும். 279 சேவென்' மரப்பெய ரொடுமர வியற்றே. 76 பா.வே 1. சேயென் - சுவடி 1052. நூற்பா 278 பாவே1. காண்க. பதிப்பு 58இல் மூலம் சேயென் எனக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இளம்பூரணர் உரையில் சேவென் மரப்பெயர் என்றும், நச்சர் உரையில் சேவென்னும் மரத்தினை என்றும் வகர உடம்படுமெய் பெற்றே வந்துள்ளது. இதனால் மூலபாடத்தை அச்சுப்பிழையாகக் கொள்ளலாம். சு.வே.யும் மூலமும் மாறி விட்டன.