பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

உள்ள பலுச்சித்தானத்தில் வழங்குவதாகும். இதைக் கொண்டும், சிந்துவெளி அகழ்வாராய்ச்சியைக் கொண்டும், இந்தியா முழுதும் ஒரு காலத்தில் திராவிட மொழிகளே இடம்பெற்றிருந்தன; ஆரியம் வந்ததும் அவை தெற்கே தள்ளப்பட்டு ஒதுங்கின - என்றெல்லாம் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர்.

தொல் திராவிடம்:

இந்தத் திராவிட மொழிகட்கெல்லாம் தலைமைத் தாய்மொழி — தலைமை முதல் மொழி — அதாவது, தொல் திராவிட மொழி ஒன்று இருந்ததாகவும், அதிலிருந்தே இந்தத் திராவிட மொழிகள் பிறந்ததாகவும் — பிரிந்ததாகவும், அந்தத் தொல் திராவிட முதன்மைத் தாய்மொழி அழிந்து விட்டதாகவும் இப்போது கிடைக்கவில்லை என்பதாகவும், மொழியியலார் சிலர் அல்லது பலர் கூறுகின்றனர். அந்தத் தொல் திராவிட மொழி எங்கே போயிற்று? அதில் பாதியைக் காக்கை தூக்கிக் கொண்டு போய் விட்டதா? மீதிப் பாதியை எலி இழுத்துக் கொண்டு போய் விட்டதா? எங்கே — எவ்வாறு போயிற்று? அந்தத் தொல் திராவிட மொழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

இலத்தீன்:

ஐரோப்பாவில் வழங்கப்பெறும் இத்தாலியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசியம், ருமேனியன் முதலிய மொழிகள், ரோமன்மொழி எனப்படும் இலத்தீனின் சிதைவு மொழிகளே. அதனால் இம்மொழிகளைரோமன்சு' (Romance)எனல் மரபு. அமெரிக்கக் கண்டத்தில் பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசியம் ஆகிய மொழிகள் வழங்கப்படும் அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, குவாட்டமாலா முதலிய இருபது நாடுகள் அடங்கிய பகுதி இலத்-