பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 அட்டவணையில், திராவிட மொழிகளில் உள்ள சில-பல பெயர்ச் சொற்கள், வேற்றுமை உருபேற்ற பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், வினையெச்சம், பெய ரெச்சம், வினைமுற்று முதலிய பல்வேறு வகைச் சொற் களும் தரப்பட்டு ஒற்றுமை நிலைநாட்டப்பட்டுள்ளது. மற்றும், இந்த நான்கு மொழிகளும் சமசுகிருதச் சொற்களை எவ்வாறு ஒத்தநிலையில் சேர்த்துக் கொண் டுள்ளன என்பதை அறிவிக்க, இந்த அட்டவணையில் சமசுகிருதச் சொற்கள் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளன. இதே நோக்கத்திற்காக, வேறு சில மொழிகளின் சொற்கள் சில வும் குறைந்த அளவில் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. இந்தப் பணி மிகவும் கடினமானது. சொற்களைத் தேடிச் சேர்ப்பதில் தலைவலி மிகுதி.ஒலிப்பில் ஐயப்பாடான சொற்கள் சில அடைப்புக் குறிக்குள் (with in bracket) தரப்பட்டிருக்கும். திராவிட மொழிகளுள் புகுந்த பிற மொழிச் சொற்களுள் சமசுகிருதமே மிக்க அளவில் தலைமை தாங்குகிறது. இவ்வாறு திராவிட மொழிச் சொற்கள்,தேவையில்லா மல் சமசுகிருதக் குருதியைத்தங்கள் உடம்பில் ஏற்றிக்கொண் டது கொடுமை. தமிழிலும் சமசுகிருதச் சொற்கள் ஒரளவு புகுந்திருப்பினும் அவற்றைக் களைந்தெறிந்து விட்டுத் தனித் தமிழிலேயே எழுத முடியும். புதியனவாக வந்து கொண்டிருக்கும் பல வகைக் கலைச் சொற்கட்கு ஏற்பத் தமிழை அமைத்துக் கொள்ள வேண்டும் - முடியும். யார் என் மீது சினமோ - வருத்தமோ கொண்டாலும் சரி - யான் ஒரு கருத்தைத் துணிந்து தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். தமிழில், ஸ்,ஜ, ஷ,ஹ,r ஆகிய எழுத்துகள் இல்லாமை ஒரு வகையில் குறைவேயாகும். கூச்சப்படாமல்